கோலாலம்பூர்:வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்கள்). கிம் ஜாங் நாம் கடந்த 13–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அவர் மீது பயங்கர விஷத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட கிம் ஜாங் நாமின் கண்கள் மற்றும் முகத்தின் தசைகளில் போர்களின்போது பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களில் இருக்கும் அதிக விஷத்தன்மை மிக்க ரசாயன தடயங்கள் காணப்படுவதாகவும், இத்தகையை ரசாயனம், மனித உடலில் உள்ள நரம்புகளை செயலிழக்க வைத்து, உடனடியாக உயிரிழக்கவும் வைக்கும் என்று மலேசிய போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.