சென்னை:இன்று காலை செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார விரைவு ரெயில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. வேலைக்கு செல்பவர்கள் உட்பட ஏராளமானோர் ரெயிலில் பயணம் செய்தனர். இடம் கிடைக்காமல் பல இளைஞர்கள் வாசலில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர்.
அப்போது, ரெயில், பரங்கிமலை அருகே வந்தபோது ரெயில் பெட்டியில் தொங்கிக்கொண்டு வந்த இளைஞர்களில் ஒருவரது பேக் மின்கம்பத்தில் சிக்கியதால் அவர் உள்பட சிலர் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.