சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அரசியல் பயணத்தை கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கினார். மேலும் புதிய கட்சியை தொடங்குவதா? அல்லது அ.தி.மு.க.வில் சேருவதா? என்பதை தன்னை சந்திக்கும் தொண்டர்களிடம் கருத்து கேட்டு வந்தார். மேலும் இது தொடர்பான முடிவை ஜெயலலிதாவின் பிறந்த நாளில் (பிப்ரவரி 24-ந்தேதி) அறிவிக்கப் போவதாக தீபா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவை சந்திக்கும் தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாகவும், இன்று மாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தீபா திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.