Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஓ.பன்னீர் செல்வம் அதிரடி நீக்கம்

$
0
0

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியது, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், கூவத்தூரில் சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது, அப்போது எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய, ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா தரப்பு நீக்கி உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பன்னீர் செல்வத்தின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய பன்னீர் செல்வத்திற்கு அதரவாக, இதுவரை 11 அதிமுக எம்.பிக்கள் மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

AIADMK General Secretary Sasikala Sacks O Panneerselvam from party


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles