அதிமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; சசிகலாவை நான் நீக்கிவிட்டேன் என்று மதுசூதனன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்க படுவதாக சசிகலா அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்பட அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன், மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க அவைத்தலைவர் பதவியிலிருந்து மதுசூதனை நீக்கினார் சசிகலா. புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. நான் சசிகலாவை நீக்கிவிட்டேன் என்று அதிரடியாக கூறினார்.
சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக உள்ளதால் அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து மதுசூதனை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.