ஆலந்தூர்:பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் கோபத்துடனும், வருத்தத்துடனும் இருக்கிறார்கள். தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் சசிகலாவை எதிர்க்கின்றனர்.
திடீரென டாக்டர் ரிச்சர்டு பீலே வந்து ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை பற்றி விளக்கம் தந்து இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில் அவர் விளக்கம் தந்து இருக்க வேண்டியது தானே. அப்போது எந்த உண்மையும் சொல்லாமல் 2 மாதத்துக்கு பிறகு தற்போது விளக்கம் தருவது ஏன்?
ஜெயலலிதா நன்றாக இருந்த போது ஒரு புகைப்படமோ, கண்காணிப்பு பதிவையோ எடுக்க முடியாதா?. இது முழுக்க முழுக்க பொய் பிரசாரம். இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி தரவில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Image may be NSFW.
Clik here to view.