விண்வெளியில் கழிவு அகற்றும் ஜப்பானின் முயற்சி தோல்வி!
விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்றும் ஜப்பான் நாட்டின் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் செயல் இழந்த பின் அங்கேயே மிதக்கின்றன. மேலும் அவற்றின் உடைந்த பாகங்களும் கழிவுகளாக மாறி விண்வெளியில் சுற்றித்திரிகின்றன.
இந்த கழிவுகள் பூமி மீதும், ஆய்வுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கை கோள்கள் மீதும் மோதும் அபாயம் உள்ளதால் அவற்றை அகற்றும் முயற்சியில் ஜப்பானின் ஏரோஸ் டேஷ் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.