மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் வாதங்கள் முடிவடைந்து பல மாதங்கள் ஆகின்றன. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டு ஏறக்குறைய தயாராகி விட்டதாகவும், அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.