சென்னை:சட்டசபையில் இன்று சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்துவதற்கான ஒரு சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
சென்னையில் அனுமதி இன்றி கம்பி வடம், ஒயர், குழாய், வடிகால் கால்வாய் ஆகியவற்றுடன் எதையும் இணைக்க கூடாது.
அதுபோல வீட்டு உரிமையாளர்கள் தெருக்களில் கழிவுநீர் விடுவதும் சட்டப்படி தவறாகும். இதை மீறுபவர்களுக்கு அபராத தொகை அதிகப்படுத்தப்படுகிறது.
அதன்படி தெருக்களில் கழிவுநீர் விடும் வீட்டுக் காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.
இதை செயல்படுத்தும் விதமாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.