ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு கடந்த 23-ம் தேதி தமிழக சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா வண்டிப் பந்தயம் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்த பின் பேட்டியளித்த ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதியும், அலங்காநல்லூரில் பிப்ரவரி 10-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தெரிவித்தனர். அதேபோல் அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வருமாறு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்ததாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.