புது டெல்லி:மத்திய அரசு பொதுமக்களிடம் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை செய்ய ஊக்குவித்து வருகிறது. அதன்படி பரிவர்த்தனையை எளிதாக்க ஆதார் அட்டை பயன்படுத்தும் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்க தற்போது 14 வங்கிகள் முன்வந்துள்ளன. விரைவில் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கு, வாடிக்கையாளர்களின் ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை 49 கோடி வாடிக்கையாளர்கள் மட்டும்தான் அவர்களது ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைத்துள்ளனர்.
அனைவரும் தங்களது ஆதார் எண்களை வங்கி கணக்குடன் இணைத்த பிறகு இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.