(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 முதல் 7.00 மணி வரை)
புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் கல்வி தொடர்பான தகவல்களை அளிக்கும் ‘கற்க கசடற’ எனும் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30முதல் 7.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்களுக்கும் உதவும் விதமாக, பல தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தங்களை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சி உதவும். மேலும் அகில இந்திய அளவில் மத்திய மாநில அரசுக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு அவசியப்படும் நுழைவுத் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களும் ‘கற்க கசடற’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறன்றன.
மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான வழிகாட்டுதல் மட்டுமின்றி அதற்கு பிறகான உயர்கல்வி குறித்த வல்லுனர்களின் ஆலோசனைகள் கொண்ட நிகழ்ச்சி என கல்விக்காக சுமார் 200 நாட்களை புதிய தலைமுறை ஒதுக்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி, பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் என பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள், கல்வி ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது . இந்நிகழ்ச்சியை அபிநயா தொகுத்து வழங்குகிறார்.