சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல வாரியமான "பீட்டா" தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அதரவாக மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பீட்டாவை தடைசெய்ய வேண்டும், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐந்தாவது நாளாக இன்றும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக பிறப்பிக்கபட்ட அவசர சட்டத்திற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை தமிழகம் வரவிருக்கிறார்.
Image may be NSFW.
Clik here to view.