Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பல் “காந்தேரி”

$
0
0

மும்பை:இந்தியா-பிரான்ஸ் கூட்டு தொழில் நுட்பத்தில் 6 நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க 2005-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மும்பையில் உள்ள எம்.டி.எல். கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்படுகிறது.

இதில் முதல் நீர்மூழ்கிக் கப்பல் “கல்வாரி” கடந்தாண்டு தயாரிக்கப்பட்டு, தற்போது கடற்படையின் கட்டுப்பாட்டில் பயிற்சி மற்றும் சோதனையில் உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது நீர்முழ்கியின் கட்டுமானம் முடிக்கப்பட்டு இன்று பயிற்சி மற்றும் சோதனைக்காக கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு “காந்தேரி” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேம்பட்ட தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிரிக் கப்பல்களை குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட இந்த ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிகள், கடலில் வைத்து சில காலம் பயிற்சி மற்றும் பரிசோதனைகள் கடற்படையால் நடத்தப்படும். அனைத்து பயிற்சி, பரிசோதனைகளும் முடிந்த பின்னர் நாட்டிற்காக கடற்படையில் “காந்தேரி” இணைக்கப்படும் என கடற்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Second Scorpene Class Submarine Khanderi launched today


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles