வடமேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 105 வயது திமிங்கலம் வாழ்ந்து வந்தது. இதை "கிரான்னி" என பெயரிட்டு கடல்வாழ் உயிரி ஆய்வாளர்கள் அழைத்து வந்தனர். இந்த திமிங்கலம் மிகவும் கொடூரமானது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்தத் திமிங்கலம் யார் பார்வைக்கும் படாமல் இருந்துள்ளது. இதனால் ஆய்வாளர்கள் அதை தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு வேளை அத்திமிங்கலம் இறந்து போயிருக்கக்கூடுமோ எனவும் அச்சமடைந்துள்ளனர். காணாமல் போன திமிங்கலத்தை கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் பார்த்துள்ளனர்.