லக்னோ: உத்திரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் சஞ்சீவ் துபே என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து அவரது உடலை கைப்பற்றினர். அறையில் தற்கொலை குறிப்பும் கண்டெடுத்தனர். தொடர் உடல்நலக் குறைவால் துபே இம்முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் தெரிவித்தனர்..
எலும்பு பாதிப்பால் கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டுவந்த அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்கொலை செய்து கொண்ட சஞ்சீவ் துபே 1987-ம் ஆண்டு பேட்ச், உ.பி. கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார்.
Image may be NSFW.
Clik here to view.