பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா(29). பெங்களூரின் பன்னர்கட்டா பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.
கடந்த வருடம் இவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோரி பெங்களூர் காவல் நிலையத்தில் அனிதா புகார் ஒன்றை அளித்தார்.
இந்நிலையில் அனிதா பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "எனது கணவர் திருமணமான முதல் நாள் இரவே பெண்களைப் போல சேலை அணிந்துகொண்டு உறங்கினார். பகலில் மற்ற ஆண்களைப் போல உடை அணிந்தாலும் இரவுகளில் பெண்களின் சேலையைக் கட்டிக்கொண்டு எனது கணவர் உறங்குகிறார். மேலும் பெண்கள் போல மேக்கப் போட்டுக்கொள்வதிலும் அவருக்கு அதிக ஆர்வம் உள்ளது. இரவில் தூங்கும் பொழுதும் பெண்களை போல புடவை கட்டிக்கொண்டும், மேக்கப் போட்டுக் கொண்டு தான் உறங்குவார். வீட்டில் இருக்கும்போது புடவையில் இருக்கவே விரும்புவார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது.
அவருக்கு லெஸ்பியன் பாலின உறவில் தான் ஆர்வம் உள்ளதாக என்னிடம் கூறுகிறார். இதனால் என்னை அவரிடமிருந்து சட்டரீதியாக பிரித்து விடுங்கள்" என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசாரால் நடத்தப்படும் வனிதா உதவி மையத்தில் ஆலோசனை பெறுவதற்காக கணவன், மனைவி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு தனது மனைவியைப் பிரிய கணவர் ராஜேஷ் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து இருவரையும் பிரிந்து செல்ல பெங்களூர் போலீசார் அனுமதித்தனர்.