Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

கருணாநிதி வீடு திரும்பினார்

$
0
0

சென்னை:தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கடந்த 15-ந்தேதி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தொண்டையில் துளையிட்டு சுவாச குழாய் (டிரக்கியோஸ்டோமி) பொருத்தப்பட்டது.

கடந்த 9 நாட்களாக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

DMK President discharged from hospital went home


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles