(Left to right): Mr. Chander Shekhar Sibal, Executive Vice President – Medical Division from Fujifilm India Pvt. Ltd, Mr. Yasunobu Nishiyama, Managing Director, Fujifilms India Pvt Ltd, Dr.S.Anandan Dean, from Sri Ramachandra University, Chennai and Prof. P M Venkata Sai, Medical Director, SRMU at the installation of 3D Digital Mammography machine at SRMU, Chennai today.
பெண்களின் மிகப்பெரிய சவாலான மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் பொருட்டு, 50 மைக்ரான் 3டி மம்மோகிராபி மெஷினை சென்னை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைகழகத்துடன் இணைந்து நிறுவியிருக்கிறது ஃபூஜி ஃப்லிம் இந்தியா பிரைவேட் லிமிடெட்!
* இந்நிறுவனத்தின் மேம்பட்ட டோமோசின்தசிஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக மார்பகத்தின் உள்ளார்ந்த அமைப்பை தெளிவாக அறிந்து, அதன்மூலமாக, வழக்கமான மம்மோகிராபி தொழில்நுட்பத்தில் கண்டுகொள்ளாமல் விடப்படும் லெசியன்களையும் எளிதில் கண்டறிய உதவுகிறது.
சென்னை, 22 அக்டோபர் 2016: மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெயர்பெற்ற, இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஃபூஜி ஃப்லிம் (fuji film)இந்தியா ப்ரைவேட் லிமிடெட் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவமனைகளுள் ஒன்றான ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை (எஸ்ஆர்எம்சி) ஆகியவை இணைந்து, அதிநவீன தொழில்நுட்பமான ’அமுலெட் இன்னொவாலிட்டி’ (Amulet Innovality)எனும் மேம்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த சாதனத்தை (மெஷின்) பயன்பாட்டுக்கு நிறுவியுள்ளதை கூட்டாக அறிவித்துள்ளன.
இந்த மெஷின் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படும் மார்பக புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். மேலும் இந்த அதிநவீன மெஷின், 50மைக்ரான் 3டி இமேஜ் தரம் மற்றும் மேம்பட்ட டோமோசின்தசிஸ் (tomosynthesis)தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், மார்பகத்தின் உள்புற அமைப்பை மிகத்தெளிவாக படம் பிடித்துக்காட்டி, அதிலுள்ள சிக்கல்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழி வகை செய்கிறது.
சமீபத்திய இ&ஒய் (E & Y)அறிக்கையின்படி, 50%-க்கும் அதிகமான மார்பக புற்றுநோயாளிகள் தாமதமாகவே கண்டறியப்படுகிறார்கள் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. புற்றுநோய் குறித்த குறைவான விழிப்புணர்வு மற்றும் நோய்க்கான ஸ்கிரீனிங் ஆகியவை இந்த தாமத கண்டறிதலுக்குப் பிரதான காரணம். இந்தியாவில், 40முதல் 69வயதிற்குள் உள்ள பெண்களில் வெறும் 1%-க்கும் குறைவானவர்களே, 24மாதங்களுக்கு ஒருமுறை பரிந்துரைக்கப்பட்ட மார்பக ஸ்கிரீனிங் மம்மோகிராம்ஸ் (mammograms)-ல் பங்கேற்கிறார்கள். ஆனால், சீனாவில் இந்த பங்கேற்பு சதவிகிதம் 30%என்பதாகவும், அமெரிக்காவில் 65%என்பதாகவும் உள்ளது.
இந்த கணக்கீடு உண்மையிலேயே வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியது.அதேநேரம் இந்தியாவில் மார்பக் புற்றுநோயை ஆரம்பத்திலேயே விரைவாக கண்டறிய வேண்டுவதற்கான அவசியத்தை அதிகரிக்கிறது. ’நேஷனல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி ப்ரோகிராம்’மூலமாக கிடைத்த தரவிலிருந்து தெரியவருவது என்னவெனில், தங்களுடைய 30-கள் மற்றும் 40-களில் உள்ள பெண்கள், இந்த நோய்க்கு அதிகம் இலக்கு ஆகிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட 1,44,937பெண்களில், ஏறக்குறைய 50%பேர் அந்நோய்க்கு பலியாகிவிட்டனர் என்பது ’க்ளோபோகான்புராஜெக்ட்’மூலமாக தெரியவருகிறது.
ஃபூஜி ஃப்லிம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்திரு. யஷூனோபு நிஷியாமா (Mr. Yasunobu Nishiyama, Managing Director Fujifilm India) இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது, "நோயை தாமதமாக கண்டறியும் போது, அது நாம் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை குறைத்துவிடும் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இவ்விஷயத்தில் குறிப்பாக பெண்களுக்கு,இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களாகவே முன்வந்து முன்னெச்சரிக்கைப் பரிசோதனைகளை செய்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மருத்துவத் துறையினரின் கடமையாகிறது. இதன்மூலமே உயிர்களை காக்க முடியும்.
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக நாங்கள் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதோடு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்கிறோம். ’அமுலெட் இன்னொவாலிட்டி’என்பது அந்தவகை முன்முயற்சிகளில் ஒன்றுதான். இதன்மூலம், உலகப் பெண்களுக்கு எளிதில் வரக்கூடிய பெரும் ஆபத்தான மார்பக புற்றுநோயை முன்கூட்டியேக் கண்டறிய முடியும்" என்றார்.
"சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இந்த அமுலெட் இன்னொவாலிட்டி மெஷினை நிறுவியதன் மூலம், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதை முன்கூட்டியே கண்டறிதல் ஆகிய விஷயங்களில் எங்களுடைய அர்ப்பணிப்பை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளோம். இந்த சீரிய முயற்சியில் எங்களுடன் கைகோர்த்த எங்களின் பங்குதாரர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு நாங்கள் மிகவும் கடன்பட்டுள்ளோம்" என்றார் ஃபூஜி ஃப்லிம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மெடிக்கல் பிரிவு துணைத் தலைவர் சந்தர் சேகர் சிபல்.
"மருத்துவத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகளை அளிப்பதில் நாங்கள் எப்போதுமே முன்னணியில் இருந்து வருகிறோம். அதில் ஒன்றுதான், இந்த 3டி டிஜிட்டல் மம்மோகிராஃபி. சென்னையில், மார்பக புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் செயல்பாட்டில் இதன் பங்களிப்பு பிரமாதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, சென்னை, மருத்துவக் கல்லூரி டீன் பேராசிரியர் எஸ்.ஆனந்தன்.
ஸ்ரீராமச்சந்திரா பல்கலையின் பேராசிரியர் பாவ்னா தேவ் மற்றும் ரேடியாலஜி & இமேஜிங் சயின்சஸ் துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கட சாய் ஆகியோர் பேசுகையில்,"இத்தகைய ஒரு தொழில்நுட்பத்தில் பணிபுரிவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதன்மூலம், இதுதொடர்பான உலகின் அதிசிறந்த தொழில்நுட்பத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக, மார்பக புற்றுநோய் பரிசோதனையில் முன்னெச்சரிக்கை முறையில் மிக நுட்பமாக செயலாற்ற இயலும்" என்றனர்.
அமுலெட் இன்னொவாலிட்டி மெஷினை ராமச்சந்திரா மருத்துவமனையில் நிறுவியுள்ளதன் மூலமாக, சென்னைப் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையில் ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் மேம்பட்ட டோமோசின்தசிஸ் தொழில்நுட்பம் பயன்படுவதால், மார்பகப் படங்களை 3டி தொழில்நுட்பத்தில் பெற முடிகிறது. இதன்மூலமாக, முன்பு 2டி தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டு வந்த தட்டையான படங்களை தவிர்க்க முடிகிறது. இந்த நவீன 3டி படங்களின் மூலமாக மார்பகத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு வெளிக்கொண்டுவரப்பட்டு, அதன் தெளிவான தற்போதைய நிலையை பரிசோதிக்க முடிகிறது. மார்பு திசுக்கள், மார்பக புற்றுநோயின் ஆரம்ப கட்டங்கள் ஆகியவைக் குறித்து ஒரு தெளிவான பார்வையை, சோதனையாளர்களுக்கு இந்த மெஷின் வழங்குவதால், வேறுபல கூடுதல் பரிசோதனைகள் தேவையாய் இருப்பதில்லை.
இந்த சாதனத்தின் மூலமாக, பரிசோதனைக்கு வரும் பெண்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான பரிசோதனை அனுபவத்தைப் பெற முடியும் என்பது இதன் சிறப்பம்சம். பரிசோதனையும், சிக்கலின்றி எளிமையாக நிறைவடைகிறது. பாரம்பரிய முறையிலான ஏஇசி பரிசோதனையில், சென்சார் நிலை ஒரேமுறையில் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறையில், ’ஆட்டோமேடிக் எக்ஸ்போஷர் கன்ட்ரோல்’ (i-AEC) இருப்பதால், ஒவ்வொரு மார்பக முறைக்கும் பொருத்தமான எக்ஸ்ரே அளவு நிர்ணயிக்கப்படுகிறது. 50மைக்ரான் பிக்ஸல் தெளிவு கொண்ட டைரக்ட் கன்வெர்ஷன் ஃப்ளாட் பேனல் டிடெக்டர் மற்றும் இதர மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை, இந்த சாதனத்திற்கு, பிறவற்றைவிட அதிக நுட்பத்தை தருகிறது. 50மைக்ரான் ரிசல்யூஷன் என்பது மிகவும் சிறந்தது மற்றும் இதனால் மிக மிக ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்துவிட முடியும்.
மம்மோகிராஃபி என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு புற்றுநோய் கண்டறியும் கருவியாகும். மம்மோகிராம் என்பவை மார்பக புற்றுநோயை தடுப்பதில்லை, ஆனால், ஆரம்ப நிலையிலேயே அந்த நோயைக் கண்டறிவதால் பல உயிர்களைக் காக்க முடிகிறது. WHO அறிக்கையின்படி, மார்பக புற்றுநோயை முன்னதாகவே கண்டறிந்ததால், 20%பெண்களின் உயிரை இந்த மம்மோகிராம்கள் காப்பாற்றியுள்ளன என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன காலத்தின் டிஜிட்டல் மம்மோகிராபி மெஷின் மற்றும் டோமோசின்தசிஸ் ஆகியவை புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து விடுகின்றன மற்றும் இதன்மூலம் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்பானது, பாரம்பரிய சோதனை முறைகளில் ஏற்படுவதைவிட குறைவு. எதிர்காலத்தில், இந்த டிஜிட்டல் மம்மோகிராபி, பரவலாக புழக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகளவிலான ஆன்காலஜிஸ்டுகள் ஒப்புக்கொள்ளும் விஷயம் என்னவெனில், 40வயது மற்றும் அதற்கு முன்னதான காலகட்டத்திலேயே மார்பக சோதனை மம்மோகிராபி தொடங்கப்பட வேண்டும். நோய்க்கு உகந்த ஜெனடிக் கூறுகள் உள்ளவர்கள் மற்றும் குடும்ப ரீதியாக பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆரம்பகால சோதனை மிக முக்கியம்.
மெஷின் தொடர்பான அம்சங்கள்
* சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய நவீன சிஸ்டமானது, இதர டிஜிட்டல் மம்மோகிராஃபி சாதனங்களைவிட, பல்வேறான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ட்யூயல் மோட் டோமோசின்தசிஸ், எச்சிபி மற்றும் ஐஎஸ்சி.
* 50மைக்ரான் பிக்சல் தெளிவுடன் கூடிய, அமோர்ஃபஸ் செலனியத்தால் உண்டாக்கப்பட்ட நேரடி கன்வெர்ஷன் ஃபிளாட் பேனல் டிடெக்டர் மற்றும் சரியான படங்களுக்கான உத்தரவாதத்தை தரக்கூடிய இதர மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள்.
* ட்யூயல் மோட் டோமோசின்தசிஸ் - ஸ்டேன்டர்டு மற்றும் உயர் தெளிவு ஆகியவை ஃபைன் டிஷ்யூ லேயர்களை சோதிப்பது மற்றும் கால்சிஃபிகேஷன் கிளஸ்டர்களை அளவிடுதல் ஆகியவற்றை மேற்கொள்ள உதவுகிறது.
* சிறந்த சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டீரியோடேக்டிக் பயோப்ஸி யூனிட் கிட், நுட்பமான மற்றும் திறன்வாய்ந்த பயோப்ஸி பரிசோதனையை சாத்தியமாக்குகிறது. இதன்மூலம், நல்ல தெளிவுள்ள விரிவான படங்கள் கிடைக்கின்றன.
* ஒவ்வொரு நோயாளியின் தேவைக்கும் ஏற்ற வகையில், பிரச்சினையற்ற பரிசோதனைச் சூழலை பராமரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மம்மோகிராபி தீர்வுகளை அமுலெட் ஹார்மொனி உள்ளடக்கியுள்ளது. இவை கீழ்கண்ட அம்சங்களை உள்ளடக்கியுள்ளன.
* ஃபிட் ஸ்வீட் பேடில் - ஒரே தரநிலையிலான மற்றும் இலகுவான பேடில்களை ஒப்பிடுகையில், இந்த பேடில் தனித்துவம் வாய்ந்த வடிவமைப்பைக் கொண்டு, அழுத்தம், மார்பகம் முழுவதும் சமஅளவில் நிறைந்து பரவ வழியேற்படுத்துகிறது.
- மூட் லைட்னிங்
- டெகொரேடிவ் லேபில்ஸ்
*ஹெக்சகோனல் க்ளோஸ் பேட்டர்ன் **இமேஜ் ஸ்பெக்ட்ரம் கன்வெர்ஷன்