Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

அறம் செய்து பழகு

$
0
0

மருத்துவத்தை எல்லா நோயாளிகளுக்கும் சரிசமமான தரத்தோடும் வசதிகளோடும் வழங்கும் நோக்கத்தோடு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை புதிய பிரச்சாத் திட்டம்

* பொருளாதார ஏற்றத் தாழ்வுகளற்றதொரு மருத்துவச் சேவையை வழங்கும் வகையில் இந்த ‘அறம் செய்து பழகு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. காரணம் நோய்கள் என்றும் மக்களில் பாகுபாடு பார்த்ததில்லை.

* இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மீனாட்சி மிஷன் மருத்துவமனை புற்றுநோய் மற்றும் உதட்டுப் பிளவு அண்ணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கும் வகையில் தனது திட்டத்தைச் சென்னைக்கு விரிவுபடுத்தி உள்ளது.

சென்னை: 2016 அக்டோபர் 22: மதுரையில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை  ஏழை, பணக்காரர், கிராமம், நகரம் என்ற எந்த வேறுபாடுமின்றி மருத்துவத்தின் சேவைகளும், அவற்றின் தரமும், எல்லா வகையான மக்களுக்கும் ஒன்றே என்பதை இயம்பும் வகையில் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. 

‘அறத்தை முதலில் உன்னில் இருந்து துவங்கு’ என்று அர்த்தமுடைய இந்த ‘அறம் செய்து பழகு’என்ற திட்டம் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ் குருசங்கர்அவர்கள் மற்றும் மருத்துவமனையால் நடத்தப்பட்டு வரும் சேவைகளால் பயன் பெற்ற சில நோயாளிகளின் முன்னிலையிலும், பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு, இயக்குநர் சீனு இராமசாமி, தயாரிப்பாளர் கதிரேசன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷாஆகியோரால் முறையாக அறிவித்துத் துவங்கப்பட்டது. 

 பிரச்சாத்தின் ஒரு பகுதியாக,  மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, புற்றுநோய் மற்றும் உதட்டுப் பிளவு அண்ணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் தனது திட்டத்தைச் சென்னைக்கு விரிவுபடுத்தி உள்ளது. இதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட எந்தக் குழந்தையும் இந்த இலவச சிகிச்சையைப் பெறலாம். இம்மருத்துவமனை இதுவரை 10,000க்கும் அதிகமான குழந்தைகள் உதட்டுப் பிளவு அண்ணம் தொடர்பான சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுள்ளன என்பதுடன் தமிழகத்தில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சையிலும் இதுவே முன்னணி வகிக்கிறது.

இது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ் குருசங்கர் கூறியதாவது‘மருத்துவ அறிவியலில் எந்த அளவு இந்த சமூகம் முன்னே செல்கிறதோ அதனின் பன்மடங்கு சிகிச்சையில் மனிதத் தன்மையை இழந்து வருகிறது. ஆரோக்கியத்திற்கான இன்றைய மருத்துவ முறைகள் சார்பற்றவையாகவும், நோயாளிகளிடம் இருந்து ஒதுக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. ஆனால் நாங்கள் சிகிச்சையினை  இரண்டு வெவ்வேறு கோணங்களில் காண்கிறோம். ஒன்று நாங்கள் நோயை எப்படி அணுகுகிறோம்.

இரண்டாவது தனிப்பட்ட நோயாளியை எப்படி அணுகுகிறோம் என்பதுதான். இதற்கான விடையை எக்காலத்தும் மானுடத்தை வழி நடத்தவல்ல கருத்துக்களைக் கொண்ட தமிழின் மேன்மையானதொரு இலக்கியமான ஆத்திச்சூடியில் ‘அறம் செய்ய விரும்பு’ அதாவது ‘அறத்தைச் செய்ய முதலில் நீ அறத்தை விரும்பு’ என்பதான அந்த வரியில் கண்டோம். அந்த வழியிலே இந்த ‘அறம் செய்யப் பழகு’ அதாவது ‘அறத்தை உன்னில் இருந்து துவங்கு’ என்கிற கோட்பாடு தொடங்கியது.  அறம் செய்வது மருத்துவர்களின் மனம் சார்ந்ததொரு உணர்வு மட்டுமின்றி மருத்துவத்திற்கான, மானுடத்திற்கான, அவர்தம் கடமை அது.  இத்திட்டம் மக்களிடையே சேவை மீதான நம்பிக்கையை மட்டுமின்றி தன்னலமற்றதொரு மருத்துவ சேவையைப் பெரியதாகப் பரப்பும் ஓர் முயற்சியாகும்’ என்றார்.

டாக்டர் குருசங்கர் மேலும் கூறுகையில்‘நோய் எல்லா மனிதர்களையும் ஒன்றாகவே காண்கிறது.  நோயின் பார்வையில் மனிதர்களுக்குப் பாகுபாடு இருந்ததில்லை.  ஆனால் மருத்துவத்தின் தரம் மற்றும் மனிதர்களின் நலம், வசதிபடைத்தோர், ஏழை, கிராமத்தவர்கள், நகரத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் வேறாய் இருக்கிறது.  ஒருவரோ சிறந்த முறையில் குணமடைகிறார். மற்றொருவரோ இருப்பதைக் கொண்டு சரி செய்து கொள்ளக் கூறப்படுகிறார். இவ்வகையான சூழலில் இந்த நொடியின் தேவையென்பது வசதிகள் மற்றும் இந்தப் பாகுபாடுகளை அழித்து சமத்துவமானதொரு சிகிச்சை முறையே எங்களுடைய விருப்பமும் நோக்கமும் மற்றும் ‘அறம் செய்து பழகு’ என்ற புதிய கொள்கையும் ஆகும்’ என்றார்.

இதையொட்டி பல்லாண்டு காலமாக மீனாட்சி மிஷனின் பல்வேறு சேவைத் திட்டங்களின் கீழே முற்றிய நோய்களுக்கான சிகிச்சை, குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் சிகிச்சை, தொலைதொடர்பு மருத்துவம், இலவச உதட்டுப் பிளவு அண்ணம் உள்ளிட்ட நோயாளிகளின் உண்மையான வாழ்வியல் சம்பவங்களைக் கொண்டு ஐந்து காணொலிகள் வெளியிடப்பட்டன. மிகப் பிற்படுத்தப்பட்ட சூழலில் இருந்து வருவோருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவரான டாக்டர் குருசங்கர் அவர்களால் நோயாளிகளின் பொருளாதார அவசியம் மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு வழங்கப்பட இருக்கிறது’ என்றார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனையால் அறத்தைச் செய்தல் என்ற சேதியை நவீன மருத்துவம் நடைமுறைப்படுத்துவதற்கான சாட்சியாய் நோயாளிகளின் உண்மைச் சம்பவங்களைப் படமாக்க முக்கிய இயக்குநரான சுதா கொங்கரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.  மருத்த்வ சேவை மனிதாபிமானத்தோடு வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கை இதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.

Campaign for equality in medical access and quality of treatment


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles