நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பயனுள்ள மருத்துவ நிகழ்ச்சி 'உணவே அமிர்தம்'
ஒரு நியூஸ் சேனலில் அதுவும் ஆண்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று நம்பப்படுகிற நியூஸ் சேனலில் மாலை 4.30க்கு பெண்கள் பார்க்கிறார்கள் குறிப்பு எடுக்கிறார்கள். என்பதே இந்நிகழ்ச்சியின் வெற்றியாகும்.
இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் மருத்துவ நிகழ்ச்சி.
இது வழக்கமான சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல் சித்த மருத்துவக் குறிப்புடன் பயனுள்ள சத்துள்ள சமையல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
இது மூன்று கட்டமைப்பில் வருகிறது.முதலில் ஒரு மருத்துவர் வருவார். உணவுப் பொருள்களும் அதன் மருத்துவப் பயன்களும் பற்றிக் கூறுவார். அவர் கூறிய பொருள்களைக் கொண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமைத்துக் காட்டுவார். அடுத்து நேயர் கேள்விகளுக்குப பதில் அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் டாக்டர் செல்வ சண்முகம் பங்கு பெறுகிறார். இவர் டாக்டர் தெய்வநாயகத்தின் மாணவர். தெய்வநாயகம் யாரென்றால் அவர் புகழ்பெற்ற அலோபதி மருத்துவர். எச்ஐவி பாதிப்பில் இருந்தவர்களை சுமார் ஒரு லட்சம் பேரைக் குணப்படுத்தியவர். அவர் அலோபதி மருத்துவத்தைவிட சித்த மருத்துவமே சிறந்தது என உணர்ந்து சித்த மருத்துவம் கற்றவர்.அவரது மாணவர்தான் டாக்டர் செல்வ சண்முகம்.இவர்தான் நம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சியில் முதலில் டாக்டர் செல்வ சண்முகம் பேசுவார். உதாரணத்துக்குப் பொடிவகைகள் பற்றி வரும் போது,வலியோ,காய்ச்சலோ,சளியோ ஏற்பட்டால் மாத்திரை சாப்பிட்டு மற்ற விளைவுகளையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் வீட்டிலேயே பொடிசெய்து நோய் நொடிகளை பொடிப்பொடியாக அழித்து ஆரோக்யம் தரும் எளிய பொடிவகை இது எனப் பொடி வகைகளை அறிமுகம் செய்வார்கள்.
இரண்டாவது பகுதியாக மருத்துவர் கூறிய பொருள்களைக் கொண்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர் சமைத்துக் காட்டுவார்.
மூன்றாவது பகுதியாக வருவது கேள்வி பதில்.
இதில் நேயர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கப் படுகிறது. இதில் உடல்நிலை, நோய்கள், மருத்துவம் பற்றிய நேயர்களின் சந்தேகங்கள் இடம்பெற்று தக்க பதில் அளிக்கப்படும்.
இப்படி இந்நிகழ்ச்சி ஒரு முழுமையான ஆரோக்கிய நிகழ்ச்சியாக விளங்குகிறது.
இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாகப் பெண்களால் பார்க்கப் படுவது மட்டுமல்ல, நிகழ்ச்சிகளின் 'டாப்-10' பட்டியலிலும் இடம்பெற்ற ஒன்றாகும்.
'உணவே அமிர்தம்' நிகழ்ச்சியை ஐஸ்வர்யா விஜய் தொகுத்து வழங்குகிறார்.