சென்னை பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்று மாலை புழல் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.