Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

மேரி கோம் பேட்டி

$
0
0

ஷில்லாங்:இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். விளையாட்டுத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

விழாவில் அவர் மேலும் பேசியதாவது:-

ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், ஆண் பாக்சர்கள் 5 முதல் 6 வாய்ப்புகள் வரை பெற்றனர். ஆனாலும் அவர்களில் பலர் தகுதி பெறவில்லை. குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தலுக்குப் பிறகு அந்த விஷயங்கள் மாற்றப்படும் என நம்புகிறேன்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் நாட்டிற்காக 2 பதக்கங்கள் மட்டுமே பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கான காரணங்களில், விளையாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

உலக சாம்பியன் ஆவதற்கான எனது முயற்சியில் ஒழுக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கடின உழைப்பு, ஆர்வம், பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவையே வெற்றிக்கான மந்திரங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Mari Kom speaks about less awareness in sports


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles