வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்த அந்நாட்டு விளையாட்டு வீரர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரியா டைம்ஸ் செய்தியின்படி வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு என்ற தன்னுடைய நாட்டு வீரர்கள் குழுவிடம் 5 தங்கம் வாங்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார் என்பது தெரியவந்து உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா 2 தங்கம் மட்டும் வாங்கி உள்ளது. வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் தன்னுடைய உத்தரவின் பெயரிலே, தோல்வி அடைந்த விளையாட்டு வீரர்களுக்கு தண்டனையாக நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்படலாம் என்று கூறப்பட்டு உள்ளது.
வடகொரியா ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 31 வீரர்களை அனுப்பியது. வடகொரியா வீரர்கள் 2 தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர். பேராசிரியர் தோஷிமித்சு ஷிகிமுரா பேசுகையில், போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நல்ல பரிசு வழங்கப்படும், சிறப்பான ரேஷன் வழங்கப்படும், ஒரு கார் உள்ள நல்ல பரிசுகள் ஆட்சியாளரிடம் இருந்து கிடைக்கலாம்.
ஆனால் விளையாட்டு வீரர்கள் தன்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கிம் ஜோங் உன் நினைத்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் மிகவும் மோசமான வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள், அவர்களுக்கான ரேஷன் குறைக்கப்படும். கடைசியாக அவர்கள் தண்டனையாக நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்பப்படுவார்கள்,” என்று கூறிஉள்ளார். இருப்பினும் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுப்பப்படுபவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.