புற்றுநோயில் பிழைத்தவர்கள் கொண்டாடும் சுதந்திர தினம்
சென்னை, ஆகஸ்ட் 13, 2016: தேசிய அளவில் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ப்ரீடம் ஃபிரம் கேன்ஸர் ரிலீஃப் அண்டு ரிசர்ச் ஃபவுண்டேஷன், நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பேராசிரியர். டாக்டர்.அனிதா ரமேஷ் அவர்கள், இந்தியாவிலுள்ள புற்றுநோயில் பிழைத்தவர்களை ஒருங்கிணைத்து புற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்வை கொண்டாடும் வகையில் ஒரு நிகழ்வை நடத்தியுள்ளார். “ஃபைட்டிங் அகெய்ன்ஸ்ட் கேன்ஸர் (புற்றுநோய்க்கு எதிரான போராட்டம்)” என்னும் இந்நிகழ்வில், குழந்தைகள் உட்பட, 100 புற்றுநோயில் பிழைத்தவர்கள் பங்கேற்றனர் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைக் கொண்hடும் வகையில் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இக்கொண்டாட்டத்தின் போது, குழந்தைகள் உட்பட்ட புற்றுநோயில் பிழைத்தவர்கள் ஃபேஷன் பரேடு, கோலம் போட்டி, பெயிண்டிங், நடனம் மற்றும் பாடல் போட்டிகள் என பல்வேறு கலாச்சார போட்டிகளில் பங்கெடுத்தனர். சர்வதேச புற்றுநோயில் பிழைத்தவர்களால் ஒரு சிறப்பு கலாச்சார நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
இந்நேர்வு குறித்து பேசிய, சவீதாமருத்துவக்கல்லூரிமருத்துவமனையின், மருத்துவபுற்றுநோயியில்பேராசிரியரும்மற்றும்ஃப்ரீடம்ஃபிரம்கேன்ஸர்ரிலீஃப்அண்டுரிசர்ச்ஃபவுண்டேஷன், நிறுவனர்மற்றும்தலைமைசெயல்அலுவலருமானபேராசிரியர். டாக்டர்.அனிதாரமேஷ்அவர்கள், “தேசம் முழுவதும் பல வழிகளில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டதன் வழியாக உடல் ரீதிலான மற்றும் மன ரீதியிலான சுதந்திரம் பெற்றவர்கள் இங்கு ஒருங்கிணைந்து தங்களது கதைகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். இக்கொண்டாட்டங்கள், அவர்களுக்கு தங்களையொத்த அனுபவம் கொண்டவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினைப் பெறுவதை சாத்தியமாக்கியுள்ளது. புற்றுநோய் பிழைத்திருப்பு நிலையின் புதிய நிஜத்தினை ஒருங்கிணைந்து கொண்டாடும் நேர்வாக இது அவர்களுக்கு அமைந்துள்ளது” என்று கூறினார்.
தேசிய புற்றுநோய் பதிவு திட்டத்தின் தரவுகளின் படி, 12.5 சதவிகித இந்திய ஆண்களுக்கும் மற்றும் 11.11 சதவிகித இந்திய பெண்களுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியங்கள் உள்ளது. எட்டு ஆண்களில் ஒருவருக்கும் மற்றும் ஒன்பது பெண்களில் ஒருவருக்கும் அவரது வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) – ன் கணக்கீடுகளின் படி, 2020 – ம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் 1.73 மில்லியனுக்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் நேர்வுகளும் மற்றும் 0.88 மில்லியன் புற்றுநோய் தொடர்பான இறப்புகளும் உண்டாகும் என தெரியவருகிறது.
“முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமாகும். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் தொடர்பான சோதனைகளையும் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோய் தொடர்பான சோதனைகளையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சை தவிர்த்து, மனநல-சமூக ரீதியிலான ஆதரவும் மிகவும் முக்கியமாகும். நிவோலுமாப் (Nivolumab), ப்ரீம்புரோலிஜுமாப் (Prembrolizumab) போன்ற புதிய மருந்துகளால், நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதும் மற்றும் பிழைத்திருப்பு வாய்ப்பினை உயர்த்துவதும் சாத்தியமாகியுள்ளது. ஒரு புதிய ஆராய்ச்சியின் படி, புற்றுநோய்க்கு எதிராக சிறப்பான திறனை வெளிப்படுத்தும் ஒரு இம்யூனோதெரபியை, எய்ட்ஸ் உண்டாக்கும் ஹெச்ஐவிக்கு எதிராகவும் பயன்படுத்தலாம் என தெரியவந்துள்ளது” என்று பேராசிரியர்.டாக்டர்.அனிதாரமேஷ்அவர்கள் மேலும் கூறினார்.
இந்நிகழ்வின் நோக்கம் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியதே மற்றும் புற்றுநோயிலிருந்து பிழைத்தபிறகு வழக்கமான வாழ்வை வாழ்வது சாத்தியமே என்னும் செய்தியை பரப்புவதே ஆகும். புற்றுநோய்க்கு எதிரான தங்களது போராட்டங்களை, தங்களது நேர்மறை மனப்பாங்கு, தன வலிமை மற்றும் உறுதியான ஆதரவு அமைப்பு தங்களது மீட்சிக்கு உதவிய கதைகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சியும் மற்றும் குதூகலமும் நிறைந்து காணப்பட்டது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை இந்நாள் முழுவதும் அங்கு வெளிப்பட்டது என்றால் அது மிகையல்ல.
பொது சுகாதாரம் மற்றும் தவிர்ப்பு மருத்துவம், ஆரோக்கிய சேவைகள் கூடுதல் இயக்குனர் டாக்டர்.TS செல்வவிநாயகம், NCD திட்டத்தின் மாநில பற்றாளர் அலுவலர் டாக்டர்.ஜெரால்டு செல்வம் மற்றும் டிரான்ஸ்டான், முதுநிலை திட்ட மேலாளர் அஞ்சனா பிந்த்லிஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.