சென்னை:சட்டசபையில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் வேண்டும் என்பது முதல்-அமைச்சர் அம்மாவின் எண்ணமாகும். இதற்காக கழிவறை இல்லாத பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2057 பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் அம்மா அறிவித்தார்.
மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதின் அடிப்படையில் 5720 பள்ளிகளில் கழிவறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 5012 பள்ளிகளில் கூடுதலாக கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் ரூ. 59 கோடியே 25 லட்சம் செலவில் 4,339 பள்ளிகளில் தனித்தனியாக கழிவறை கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.