கவுகாத்தி:அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியின், கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதிக்கு இன்று பிற்பகல் சில தீவிரவாதிகள் கடைவீதியில் இருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.