புதுடெல்லி: இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் புறப்பட்டு சென்றுள்ளார்.
ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் புறப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் சயிது சலாஹுதின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர், அவர்கள் ராஜ்நாத் சிங்கிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.