டமாஸ்கஸ்:சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள், இப்போது சிரியாவில் மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றி அங்குள்ள 24 பேரை வெட்டிக் கொன்றதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியான மன்பிஜ் நகரில் அருகாமையில் உள்ள புயிர் என்ற கிராமத்துக்குள் நேற்று புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்த கிராமத்தை தங்கள் வசப்படுத்தி உள்ளதாகவும், அங்கு வசித்துவந்த 24 பேரை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் பெய்ருட் நகரில் உள்ள சிரியாவுக்கான சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.