மும்பை:மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள பலேவாடி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 14 மாடி கட்டிடத்தின் மேல் தளம் இன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். 15-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வேலை செய்து வந்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.