முதல்வருடன் சரத்குமார் சந்திப்பு: மகள் திருமணத்திற்கு அழைப்பு
சரத்குமார்-ராதிகா தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தனது குடும்பதாருடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார் சரத்குமார். மேலும் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று முதல்வரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.