(திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12.00 மணிக்கு)
வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “மாஸ்டர் கிச்சன்”. இந்த சமையல் நிகழ்ச்சி, ஒளிபரப்பான ஆரம்ப காலந்தொட்டு பல்வேறு பரிமாணங்களை அடைந்து தற்போது,” மாஸ்டர் கிச்சன்” என்ற பெயரில் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் தனிச்சிறப்பு வாய்ந்த உணவு வகைகள் நேயர்களுக்கு செய்து காட்டப்படுவதால் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த வாரம் ஸ்டார் ஸ்பெஷல் பகுதியில் சின்னத்திரை பிரபலங்கள் ஸ்வேதா, ஜூலி ஆகியோர் கலந்து கொண்டு வித்தியாசமான அறுசுவை உணவுகளை செய்து அசத்துகிறார்கள்.
இரண்டாவது பகுதியில் பிரபல செப் ப்ரீத்தி கலந்து கொண்டு தரமான உணவு வகைகளை சுவையாக செய்வது எப்படி என்பதனை விளக்கி சமைத்து காட்டுகிறார்.
மூன்றாவது பகுதி ஹெல்த் மாஸ்டர் என்ற பெயரில் ஆரோக்கிய உணவு வகைகளை சமைத்து காட்டும் பகுதியாக ஒளிப்பரப்பாகிறது. இந்தப் பகுதியில் சமைக்கும் கலையை கையிலெடுப்பவர் பிரபல உளவியல் நிபுணர் அபிலாஷா அவர்கள். மனநலத்தோடு தொடர்புடைய உணவு வகைகள் பலவற்றை நேயர்கள் பயன்பெறும் வகையில் செய்து காட்டி விளக்குகிறார்.
இப்படி இந்த மாஸ்டர் கிச்சன் பகுதியில் செய்து காட்டப்படும் உணவு வகைகள் அனைத்தும் உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்ததாக இருப்பதால் நேயர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
வரும் வாரங்களில் சமைத்துக்காட்டப்படும் உணவு வகைகள் டேட்ஸ் பணியாரம், பீனட் ப்ரான், ஸ்வீட் சமோசா, ஜவ்வரிசி வடை, சன்னா பேன்கேக், பாதாம் ஷீரா, பட்டூரா, சில்லி எக்.