வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு விருது: ஐசிஎஸ்ஐ தலைவர் சி.எஸ்.மம்தா பினானி அறிவிப்பு
சென்னை, பிப்.20- இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி நிலையமான (ஐசிஎஸ்ஐ) வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் “ஐசிஎஸ்ஐ சிக்னேச்சர் விருது" என்ற விருதை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎஸ்ஐ தலைவர் பி.எஸ்.மம்தா பினானி மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், இந்திய நிர்வாகவியல் பயிற்சி நிலையம் (ஐஐஎம்) இந்திய தொழில்நுட்ப பயிற்சிநிலையம் (ஐஐடி) ஆகியவை நடத்தும் சிறப்பு பாடத்திட்டங்கள் வாயிலாக பயின்று அதிகமதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்றார்.
இந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிக்காட்டுதல்கள் படி செயல்படும் மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் இதற்கு தகுதி வாய்ந்தவை ஆகும். பல்கலைக்கழக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் நபருக்கு (ஒரு விருது)ஐசிஎஸ்ஐ சிக்னேச்சர் விருது வழங்கப்படும்.
இந்திய நிறுவனசெயலர்கள் பயிற்சிநிலையத்தின் (ஐசிஎஸ்ஐ) முக்கியமான முடிவு என்னவென்றால் மாணவர்களுக்காக சிஎஸ் ஒலிம்பியாட் என்ற போட்டி 2016 செப்டம்பர் மாதம் நடத்தப்படும். இந்தியா முழுவதும் பள்ளிகளில் ஒவ்வொறு கல்வியாண்டிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
முதலவது சிஎஸ் ஒலிம்யாட் போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். சிஎஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அடையாள சின்னத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்சசியடைவதாக கூறிய அவர் மாணவர்களிடையே போட்டி போடுத் திறனை அதிகரிக்க இதுபோன்ற ஆரோக்கியமான போட்டிகள் உதவம் என்றார். இந்த போட்டியின் தேவையை வலியுறுத்தும் வகையில் சிஎஸ் ஒலிம்பியாட் போட்டியின் சின்னம் அமைந்துள்ளது என்றும் மம்தா பினானி கூறினார். இதற்காக சயின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேஷன் என்ற அமைப்புடன் (எஸ்ஓஎஃப்) ஐசிஎஸ்ஐ புரிந்துணர்வுஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தரமான கல்வியை வழங்க பயிற்சி மையங்களை ஐசிஎஸ்ஐ அமைத்து வருவதாகவும் இந்த மையங்கள் ஐசிஎஸ்ஐ மாணவர்களுக்கு வழிகாட்டி மையங்களாகவும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பல்கலைக்கழக படிப்புகளை வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில்படிப்புகளாக மாற்றுவது குறித்த பணியை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார் ஐசிஎஸ்ஐ மாணவர் கல்வி நிதி அறக்கட்டளையின் மூலமாக சிறந்த மாணவர்களுக்கு தகுதி அடிப்படையிலான மாதந்திர கல்விஉதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.