வாகன மாசு வெளியேற்ற ஊழல் தொடர்பாக சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கு ஃபோக்ஸ்வேகன் வாகன உற்பத்தி நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்க வரலாற்றிலேயே பிரச்சனை ஒன்றின் தீர்வுக்காக அளிக்கப்படும் இந்தத் தொகை வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழுதுகளை நீக்குவது அல்லது கிட்டதட்ட அரை மில்லியன் உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை திரும்ப வாங்குவது, அந்த உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் வரை இழப்பீடு வழங்குவது என பத்து பில்லியனுக்கு மேலான அமெரிக்க டாலர் செலவை இது உள்ளடக்குகிறது.
மாசுபடுத்தும் வாகனங்கள் ஏற்படுத்துகிற சுற்றுச்சூழல் மாசுபாட்டை சரிகட்டத் தேவையானத் திட்டங்களுக்கு நிதி வழங்கவும், மாசுபடுத்தாத தொழில்நுட்பங்களை கண்டறிய ஆராய்ச்சி செய்யவும் ஏறக்குறைய ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படும்.
இந்த சுமூகமான தீர்வுக்கு இன்னும் ஒரு நீதிபதியின் அனுமதியும் அவசியாகும்.