அல் கயீதா அமைப்பினரால் கடத்தப்பட்டு மூன்று ஆண்டுகளாக பிணைக் கைதியாக இருந்தது குறித்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகனான அலி ஹைதர் கிலானி முதல் முறையாக பேசியுள்ளார்.
தான் கடத்தப்பட்டது தன் தந்தை மீதான பழிவாங்கும் நடவடிக்கை என அல் கயீதா அமைப்பினர் தன்னிடம் கூறியதாக பிபிசி அளித்த பேட்டியில் அலி ஹைதர் கிலானி தெரிவித்தார்.
அலி ஹைதர் கிலானியை விடுவிட்க, அவரை கடத்தியவர்கள் தங்களுக்கு பெரும்தொகையளிக்கவும், மேலும் முக்கிய அல் கயீதா அமைப்பு கைதிகளை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மாதம் நடந்த அமெரிக்க-ஆப்கான் கூட்டு ராணுவ நடவடிக்கையினால் அலி ஹைதர் கிலானி மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.