திரைப்பட நடிகர் விக்ரம் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துடன் சம்பந்தம் வைக்க உள்ளார். விக்ரமின் மாப்பிள்ளையாகப் போகிறார் கருணாநிதியின் கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்.
நடிகர் விக்ரமிற்கு துருவ் என்ற மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர், இவர்களில் அக்ஷிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறஉள்ளது
விக்ரமும் மகள் அக்ஷிதாவிற்கும், மனுரஞ்சித் என்பவருக்கும் ஜூலை 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது,கேவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் தான் மனு ரஞ்சித் இவரது தாயார், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது திருமணநிகழ்ச்சிக்கு குடும்பத்தினரோடு நெறுங்கிய நண்பர்கள் மட்டுமே அழைப்பு விடபட்டுள்ளது,எனவே இதன் மூலம் நடிகர் விக்ரம் திரு.கருணாநிதியின் குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய உள்ளார்.
இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.