(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 முதல் 5.00 மணி வரை)
புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அளிக்கும் ‘கற்க கசடற’ எனும் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 முதல் 5.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பணிநாடுநர்கள் என பல தரப்பினருக்கும் உதவும் விதமாக, தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.
அகில இந்திய அளவில் மத்திய மாநில அரசுக் கல்வி நிறுவனங்கள், அவற்றில் வழங்கப்படும் குறுகியகால, நீண்டகால, சான்றிதழ், பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். கல்வி உதவித்தொகைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் விதமான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களும் ‘கற்க கசடற’ நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறது.
மாணவர்கள் உயர்கல்வி குறித்த கேட்கும் கேள்விகளுக்கு, ‘கற்க கசடற’ நிகழ்ச்சியின் வாயிலாக நேரடி விளக்கங்களும் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவரும் தனக்கு ஏற்ற உயர்கல்வி பிரிவை அடையாளம் காண்பது எப்படி? மாணவர்கள் பெற்றோர்கள் அதிகம் விரும்பும் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்ன? அவை மட்டுமின்றி, இப்போதைய சூழலுக்கேற்ற வேலைவாய்ப்பைத் தேடித் தரும் புதிய படிப்புகள் என்னென்ன? போன்ற உயர்கல்வி சார்ந்த அத்தனை ஐயங்களுக்கும் பதிலளிக்கிறது.
இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி, மின்னஞ்சல், பேஸ்புக், வாட்ஸ் அப் என பல்வேறு ஊடகங்கள் மூலம் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சிறந்த கல்வி ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை அபிநயா தொகுத்து வழங்குகிறார்.