In Pic: Stefano Pelle, Managing Director and CEO, Piaggio India inaugurating the Motoplex in Chennai
இந்தியாவில் மூன்றாவது பிரீமியம் சில்லறை விற்பனை நிலையத்தை துவக்கியது பியாஜியோ இந்தியா
மோட்டோ பிளக்ஸ் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த நிலையம் தென்னிந்தியாவில் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும்
சென்னை, மே 24: மோட்டோ பிளக்ஸ் என்ற பெயரில் இரண்டு சில்லறை விற்பனை நிலையங்களை வெற்றி கரமாக துவக்கிய பியாஜியோ குழுமம் இந்தியா முழுவதும் தனது வர்த்தகத்தை தீவிரமாக விரிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புனேயில் தனது முதலாவது மோட்டோ பிளக்ஸ் விற்பனை நிலையத்தை துவக்கியது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் ஐதராபாத்தில் இரண்டாவது மோட்டோ பிளக்ஸ் விற்பனை நிலையத்தை பியாஜியோ குழுமம் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 3வது விற்பனை நிலையத்தை “தென்னிந்தியாவின் டெட்ராய்டு" என்று அழைக்கப்படும் சென்னையில் திறந்துள்ளது. தென்னிந்தியாவில் மோட்டோ பிளக்ஸ் சில்லறை விற்பனை நிலையம் திறக்கப்படும் 2வது நகரமாகும் சென்னை.
இந்த விற்பனை நிலையத்தை பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஸ்டேஃபெனோ பெல்லி திறந்து வைத்தார். சென்னை அசோக்நகரில் 4வது அவென்யூவில் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையம் 4 ஆயிரத்தி 61 சதுர அடியை கொண்டுள்ளது.
நுகர்வோருக்கு புதுமையான விற்பனை நிலைய அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக உலகில் பெருநகரங்களுக்கு என்ற தனி தத்துவத்தை பியாஜியோகுழுமம் உருவாக்கி வருகிறது. பியாஜியோ குழுமத்தின் தயாரிப்புகளான வெஸ்பா, ஆப்ரில்லோ, மோட்டோ கஸ்சி ஆகியவை இந்த விற்பனை நிலையங்களில் காட்சிக்காக நிறுத்தப்பட்டிருக்கும். பைக் ஆர்வலர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பியாஜியோ பிராண்ட் தயாரிப்பை வெளிப்படையாக தெரிவிக்கவும் தங்களது பைக் அனுபங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ஒரு மேடையாக இந்த விற்பனை நிலையஙகள் திகழ்கின்றன.
பல்வேறு நிறுவனங்களின் மோட்டார் வாகன தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் இதுபோன்ற விற்பனை நிலையங்கள் ஏற்கனவே மிலான், நியுயார்க், ஷாங்காய், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் பியாஜியோவால் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பியாஜியோ குழுமத்தின் அனைத்து தயாரிப்புகளும் கிடைக்கும்.
எங்களது முன்னோடி விற்பனை நிலையத்தை சென்னையில் திறப்பது குறித்து பெருமகிழ்ச்சியடையவதாக பியாஜியோ வெஹிகில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. ஸ்டேஃபெனோ பெல்லி கூறினார். இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள 3வது விற்பனை நிலையம் மட்டுமல்ல தென்னிந்தியாவில் 2வது விற்பனை நிலையம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் இருசக்கரவாகனங்களுக்கு விறுவிறுப்பான சந்தை உள்ளது. எனவே நாங்கள் இந்த பிராந்தியத்திற்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். எனவேதான் எங்களது புதிய தத்துவப்படி உருவாக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை நிலையத்தை இந் நகரில் திறந்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
மோட்டோ பிளக்ஸ் சென்னை பிரிவு நிர்வாக இயக்குநர் திரு சதிஷ்மேத்தா கூறுகையில் வாடிக்கையாளர்ளுக்கு புதிய அனுபவத்தை தரும் “பியாஜியோ"வின் முதலாவது சில்லறை விற்பனை நிலையமான மோட்டோ பிளக்ஸ் இங்கு திறக்கப்பட்டுள்ளதால் எங்களது நீண்ட நாள்விருப்பம் நிறைவேறியுள்ளது. சென்னையில் பியாஜியோவின் முன்னணி பிராண்ட் தயாரிப்புகளின் பிரதிநிதியாக நாங்கள் இருப்பது பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.