Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி

$
0
0

(L-R): Mr. Akito Tachibana, Managing Director, Toyota Kirloskar Motor, Mr. Lankalingam, Dealer Principal, Lanson Toyota and Mrs. Reetha Lankalingam, Joint Managing Director, Lanson Toyota unveiling the Toyota Driving School logo

தமிழகத்தில் முதலாவது ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் துவக்கம்

சரியாக வாகனங்களை ஓட்டவும் சாலைபாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கவும் முயற்சி

சென்னை, மே 25: பாதுகாப்பான கார், பாதுகாப்பான ஓட்டுநர் என்ற நோக்கத்தை அடையும் வகையில் டோயேட்டா கிர்லோஷ்கர் மோட்டார் (டிகேஎம்) நிறுவனம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தனது முதலாவது டோயேட்டா ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியை துவக்கியுள்ளது.டோயோட்டா நிறுவன தயாரிப்புகளின் முன்னணி விநியோக நிறுவனமான லான்சன் டோயோட்டா இந்தப்பள்ளியை நிர்வாகம் செய்ய உள்ளது. இது இந்தியாவில டோயோட்டா திறந்துள்ள 4வது ஓட்டுநர் பயிற்சி பள்ளியாகும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் மு.ராஜராம்,ஐஏஸ் ஓய்வு, லான்சன் டோயோட்டா முதன்மை டீலர் திரு.லங்கா லிங்கம்,டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு. அக்கிடோ தச்சிபனா, துணை மேலாண் இயக்குநர் திரு. டி.எஸ்.ஜெய்சங்கர், மூத்த துணைத்தலைவர் திரு. அமகாசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பான ஓட்டுநர் பாதுகாப்பான கார் என்ற நோக்கத்தை அடையும் வகையில் டோயோட்டா ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி திறக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறவுள்ள ஒவ்வொரு மாணவரும் பொறுப்புள்ள ஓட்டுநர்களாக வெளியே வருவார்கள். இந்த பயிற்சி திட்டத்திற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் இருக்கும். மேலும் பயிற்சிகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் பயிற்சி மாதிரிகள் அனைத்தும் உயர்தரத்தில் இருக்கும்.

மாதிரி ஓட்டுநர் காரை ஓட்டும்முறையை நேரில் காணலாம். எடியோஸ் காரை ஓட்டினால் என்ன அனுபவம்கிடைக்குமோ அதுபோன்ற அனுவத்தை பயிற்சிப்பள்ளியில் பெற மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

பாடத்திட்டங்கள்: போக்குவரத்து நிர்வாகம், விதிமுறைகள், ஒழுக்கம், பாதுகாப்பான மற்றும் சரியான பயணமுறை, ஓட்டுநரின் ஓழுக்கம் மற்றும் பொறுப்புகள், உண்மையான வாகனத்தை ஓட்டீனால் என்ன அனுபவம் கிடைக்குமோ அதை பெற சிமுலேஷன் ஓட்டுநர் பயற்சி, சாலையில் ஓட்டும் பயிற்சி, பல்வேறு வகையான சாலைகளின் தன்மையை பொறுத்து ஓட்டும் பயிற்சி, உங்களது காரை அறிந்துகொள்ளுதல், அடிப்படை பழுதுபார்ப்பு பயிற்சியை தெரிந்துகொள்ளுதல், அவசர கால நிர்வாகம் உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.

ஓட்டுநர் பயிற்சிபள்ளி துவக்க நிகழ்ச்சியில் பேசிய டோயோட்டா கிர்லோஷ்கர் மேலாண் இயக்குநர் திரு.அகிடோ டாச்சிபானா, “இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய பெருநகரமான சென்னையில் எங்களது ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியை துவக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். சாலை பாதுகாப்பிற்கு சரியான தீர்வை காண எங்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு இந்த முன்முயற்சி என்றும் அவர்கூறினார். இது பத்தோடு பதினொன்றாக உள்ள ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி அல்ல.

சாலைப்பாதுகாப்பு என்ற நோக்கத்தை அடைய உண்மையாக இயங்கக்கூடிய சரியான பயிற்சிஅளிக்கக்கூடிய பள்ளி என்றும் அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய டோயோட்டா லான்சன் முதன்மை விநியோக நிறுவனத்தின் நிர்வாகி திரு.லங்காலிங்கம், “நமது நகரின் சாலைபாதுகாப்பை உறுதிப்படுத்த டோயோட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட எங்களுக்கு இந்தநல்வாய்ப்பு கிடைத்திருப்பது நினைத்து பெருமகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பல ஆண்டுகளாகவே டோயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவரை இந்நிறுவனம் 10முதல் 14 வயதுள்ள 6 லட்சம் மாணவர்களிடம் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Toyota Kirloskar Motor launches its Driving School In Tamil Nadu


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles