(ஞாயிறு (24- 04-2016) அன்று தொடர் நிகழ்ச்சி)
உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் தீர்வை எட்டாத காவிரி நீர் பிரச்சனை...நிலத்தின் விளிம்பில் கடலை மட்டுமே நம்பி வாழும் மக்கள்...! வாழ் வாதாரமான கடலிலிருந்தே அப்புறப்படுத்த முயற்சி...!
பெரியாறு அணையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர துடிக்கும் அண்டை மாநிலம்...!36 ஆண்டுகாலமாக போராடும் தமிழகம் ...!
தமிழகத்தின் முதன்மை வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி ...
விளைநிலங்களை கரி நிலங்களாக மாற்ற துடிக்கும் அரக்கன்...!
மீத்தேன், ஷெல் என உருமாறும் திட்டங்கள்...மதுப் பழக்கத்தால் துவண்டு தவிக்கிறது தமிழகம்! மதுவுக்கு எதிராக மொத்தக் கட்சிகளும் குரல் கொடுத்தும், செவி சாய்க்காத ஆளும் அரசு...தேர்தல் அஸ்திரமான மது விலக்கு! பாரபச்சமின்றி ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகள் !பன்னாட்டு அட்டைபூச்சிகள் உறிஞ்சும் மறை நீர்!
மன்னர் ஆட்சியில் இருந்த மக்கள் நல கொள்கைகள், மக்கள் ஆட்சியில் வேரருந்தது எப்படி? உச்சநீதிமன்றத்தை மதிக்காத இரு மாநில அரசுகள்....புரட்சிகர பாடகர்களுடன் சத்தியம் குழுவும்...,கன்னியா மதகு நோக்கி காட்டு வழி பயணம்...!கடந்த கால தமிழகத்தையும், வர போகும் ஐந்தாண்டில் நமக்கு வேண்டியதை தெளிவாக யோசித்து உணரும் பொது நல நோக்குடன் வரும் ஞாயிறு (24-04-2016) அன்று விடியலை நோக்கி தொடர் நிகழ்சிகள் நமது சத்தியம் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்....