உலக பக்கவாத தினம் - முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் மௌனமொழி நாடகம் வழியாக “BE FAST” (விரைவாக செயல்படுங்கள்) என்ற கருத்தாக்கம் மீது ஃபோர்டிஸ் மலர் நடத்தும் விழிப்புணர்வு செயல்திட்டம்
சென்னை, 29 அக்டோபர் 2017: உலக பக்கவாத தின அனுசரிப்பையொட்டி பக்கவாதம் (ஸ்ட்ரோக்)குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஃபோர்டிஸ் மலர் மருத்துவனையின் ஏற்பாட்டின்பேரில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் ஒரு மௌனமொழி நாடக நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த மௌனமொழி நாடக நிகழ்வின் மூலம் பக்கவாதத்தின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கான அணுகுமுறையான BE FAST(விரைவாக செயல்படுங்கள்) என்ற கருத்தாக்கம் குறித்து மக்களுக்கு கற்பிப்பதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க இந்த மைம் கலைஞர் (அபிநய மொழி) முற்பட்டார். இதன் மூலம் பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு உடனடியான மருத்துவ கவனிப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்நிகழ்வு நடத்தப்பட்டது. BE FASTஅணுகுமுறை என்பது, Balance loss, Eye sight changes, Face drooping, Arm weakness, Speech difficulty, Time to call stroke centre (சமநிலை இழப்பு, கண் பார்வை மாற்றங்கள், முகம் தொங்குதல், புஜம் பலவீனம், பேச்சு சிரமம், பக்கவாத சிகிச்சை மையத்தை அழைப்பதற்கான நேரம்) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்தை உள்ளடக்கியதாகும். இந்த மௌனமொழி நாடகமானது, அடையார் சந்திப்பு, திருவான்மியூர், மத்திய கைலாஷ், சிஎல்ஆர்ஐ மற்றும் டைடல் பார்க் போன்ற சில முக்கியமான மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள சந்திப்புகளில் நடத்தப்பட்டது. மக்கள் மத்தியில் இதன் காரணமாக அதிகளவிலான ஆர்வமும், பக்கவாதம் குறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது.
உலக பக்கவாத தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு செயல்திட்டத்தை நடத்துவதற்காக ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் இயங்கிவரும் தி ஃபோர்டிஸ் காம்ப்ரிஹென்சிவ் ஸ்ட்ரோக் டீம்-ஐ சேர்ந்த மருத்துவர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு செயல்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த, சென்னை,ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின்முதுநிலை மூளை & நரம்பியல் துறை நிபுணரும், வலிப்புநோய் சிகிச்சை வல்லுநருமான டாக்டர். தினேஷ் நாயக், “பக்கவாதம்/ஸ்ட்ரோக் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை நேர்வாகும். அத்தகைய நிகழ்வில் இடையீட்டு சிகிச்சை மூலம் மூளைக்கு இரத்தம் தடையின்றி தொடர்ந்து செல்லுமாறு முந்தைய இயல்புநிலைக்கு கொண்டுவரச்செய்வதற்கு சாத்தியமும், திறனும் இப்போது இருக்கிறது. நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக சிகிச்சையளிப்பதன் மூலம் மூளையை பாதுகாக்க முடியும். ஆகவே, எவ்வளவு விரைவாக ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அடையாளம் காண்பதும் மற்றும் உடனடி சிகிச்சைக்கு அந்நபரை அழைத்துச் செல்வதும் உண்மையிலேயே அத்தியாவசியமானதாகும். பக்கவாத பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நபரை அடையாளம் கண்டறிந்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க BE FAST குறித்து ஒவ்வொரு நபரும் நன்கு அறிந்திருப்பது மிக முக்கியமானதாகும்,”என்று கூறினார்.
பக்கவாதம்/ஸ்ட்ரோக் என்பது, மூளையின் எந்தவொரு பகுதிக்கும் இரத்தம் செல்வதில் ஏற்படும் தடங்கல்/இடையூறின் விளைவாக மூளையில் ஏற்படும் தாக்குதல் பாதிப்பாகும். ஒரு சில வினாடிகளுக்கும் அதிகமாக மூளைக்கு இரத்தம் செல்வது தடுக்கப்படுமானால், மூளைக்கு இரத்தமும், ஆக்ஸிஜனும் கிடைக்காமல் போகிறது. இதனால், மூளையில் உள்ள செல்கள் உயிரிழக்கும் மற்றும் மூளையின் பாதிப்படைந்த பகுதியால் கட்டுப்படுத்தப்பட்டுவரும் செயல்திறன்கள் இழக்கப்படும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புகைப்பிடித்தல், குடும்பத்தில் பிறருக்கு இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட்ட வரலாறு ஆகியவை பக்கவாதம் ஏற்படுவதற்கான பொதுவான இடர்காரணிகளுள் உள்ளடங்கும். மூளைக்கு இரத்தமும், ஆக்ஸிஜனும் செல்வதைத் தடுக்கிற இத்தகைய பக்கவாத பாதிப்பானது ஒவ்வொரு நொடிக்கும் 1.9 மில்லியன் நரம்பு செல்களை சேதப்படுத்தக்கூடும். தலை அல்லது கழுத்தில் ஏற்படும் காயம்/அதிர்ச்சியானது 50 வயதுக்கு குறைவான நோயாளிகளுக்கு மத்தியில் பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பை மூன்று மடங்கு அதிகரிக்கிறது. பக்கவாத பாதிப்பு நிகழ்வது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுமானால், நீண்டகாலத்திற்கு உடற் பாகங்களின் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க பலனளிக்கும் சிகிச்சையை உரிய நேரத்திற்குள் வழங்கமுடியும்.