Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை: ஹேப்பி லூசர்’ஸ் கிளப்

$
0
0

சென்னை, அக்டோபர் 14, 2017: தமிழ்நாட்டுக்கே உரிய டப்பாங்குத்து இசைப்பாடலுக்கேற்ப மக்கள் நடனமாடி தங்களது கலோரிகளை குறைக்கின்ற நிகழ்வை மகிழ்ச்சியோடு இழப்பவர்கள் மன்றத்தின் (ஹேப்பி லூசர்ஸ் கிளப்) வழியாக ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை இன்று கொண்டாடியது. உடல் எடை குறைப்புக்கான பாதையை தேர்வுசெய்திருக்கும் மற்றும் உடல் கொழுப்பு நீக்கல் அறுவைசிகிச்சை வழியாக ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தவிரும்பும் நபர்களுக்கான ஒரு சூழலையும் மற்றும் ஆதரவு அமைப்பையும் இந்த மன்றம் வழங்கி உத்வேகமளித்து வருகிறது. உடற்கொழுப்பு நீக்கல் அறுவைசிகிச்சை மீது விழிப்புணர்வை உருவாக்குவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னிலைப்படுத்துவது என்ற நோக்கத்திற்காக ஜூம்பா மற்றும் குத்து இசைப்பாடல்களுக்கு ஆர்வத்தோடு மக்கள் நடனமாடியதை இந்நிகழ்வில் இடம்பெற்றது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் முதுநிலை மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல் நிபுணரான டாக்டர் நித்யா ராமமூர்த்தி அவர்களால் இந்நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.

உற்சாகமும், துடிப்பும் நிறைந்த இந்த நிகழ்வில் நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வெகு ஆர்வத்தோடு பங்கேற்றனர். மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை மீது கூர்நோக்கம் செலுத்துகின்ற இந்நிகழ்வானது, உடற்பருமன் மற்றும் அதனோடு தொடர்புடைய கோளாறுகளான நீரிழிவு, அதிக கொழுப்பு நோய், உயர் இரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, உறக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான செயல்தளத்தை வழங்குவதையும் மற்றும் அவர்களது உடல்நலமானது, சரியான தடத்தில் பயணிப்பதை உறுதிசெய்வதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

ஹேப்பி லூசர்ஸ் கிளப்-ன் இச்சிறப்பான முனைப்புத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர். நித்யா இராமமூர்த்தி, 'இந்தியாவில் ஒரு மிகப்பெரிய பொது சுகாதார சவாலாக உடல் பருமன் உருவாகியிருக்கிறது. நகர் பகுதிகளில் உடல் பருமன் பாதிப்பு கிராமப்பகுதிகளைவிட அதிகமாக இருக்கிறது. அத்துடன் ஆண்களைவிட பெண்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலட்டுத்தன்மை, கருவுறல் வாய்ப்புகள் குறைதல், கருக்கலைந்துவிடும் விகிதாச்சாரம் அதிகரிப்பது மற்றும் கருவுற்ற நிலையில் சிக்கல்கள் ஆகியவை மிகையான உடல் எடையுள்ள பருமனான பெண்களிடம் அதிகரித்து காணப்படுகின்றன,' என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மினிமல் ஆக்சஸ் கேஸ்ட்ரோ (இரையக) & உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை துறையின் ஆலோசகர் டாக்டர். தீபக் சுப்ரமணியன் பேசுகையில், 'மாறுபக்க கொழுப்பு, சர்க்கரை மற்றும் பிற ஆரோக்கியமற்ற, செயற்கையான உட்பொருட்களை மிக அதிக விகிதாச்சாரத்தில் கொண்டிருக்கின்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீது இந்திய மக்களுள் ஏராளமானோர் சார்ந்திருக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆரோக்கியமற்ற இந்த உட்பொருள்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது படிப்படியாக உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. எடை அதிகரிப்பால் ஏற்படும் உடல்பருமனானது பல நோய்கள் ஏற்படுவதற்கான மைய காரணமாகவும் கருதப்படுகிறது. சிலவகையான புற்றுநோய்கள், நீரிழிவு, இதயநோய்கள் மற்றும் பக்கவாதங்கள் போன்றவைக்கு கணிசமான உடல்நல இடர்களை அதிகரித்த உடல்எடை ஏற்படுத்துகிறது. ஹேப்பி லூசர்ஸ் கிளப் என்ற இம்மன்றத்தைச்சேர்ந்த நாங்கள், உடல் எடை மீது ஒரு கண்காணிப்பை கொண்டிருக்கும் குறிக்கோளோடும் மற்றும் உடல் பருமன் தொடர்பான அனைத்து நோய்களை அகற்றுகின்ற நோக்கத்தோடும் இச்செயல்முயற்சியை தொடங்கினோம்,' என்று கூறினார்.

ஜெம் மருத்துவமனை & ஆராய்ச்சி மையத்தின், உடல் எடை குறைப்பு அறுவைசிகிச்சை துறைத்தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ்பேசுகையில், 'வாழ்க்கைமுறை சீர்குலைவுகளும், கோளாறுகளும் அளவுக்கு மிகையான உடல் எடை பிரச்சினையின் கீழ் மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் அவதியுறுமாறு நிர்ப்பந்திக்கின்ற நிலையில் இளவயதிலுள்ள நபர்கள் கூட அதிக உடல் எடையுடன் பருமனாக காணப்படுகின்றனர். இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நாள கோளாறுகள் உட்பட பல தொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள் உருவாவதற்கு அளவுக்கு அதிகமான உடல் எடை காரணமாக இருக்கிறது. மக்கள் உடல்தகுதியோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க உதவவும் மற்றும் இதுகுறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது,' என்று கூறினார்.

மக்கள்ஆரோக்கியமான உடல் எடையை அடைவதற்கும் மற்றும் அதனை பராமரிப்பதற்கும் மற்றும் உடல்பருமன் பிரச்சினையிலிருந்து விடுபட்டு உகந்த எடையை பெறுவதற்கும் சாத்தியமான நடைமுறை தீர்வுகளை ஃபோர்டிஸ் ஜெம் சென்டர் வழங்குகிறது. 40-க்கு மேல் உடல் நிறை குறியீடு உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது. விரைவாக மீளக்கூடிய கால அளவுடன் கூடிய சாவி துவார அறுவைசிகிச்சையும் இங்கு கிடைக்கிறது. உடல் பருமனுக்கும் மற்றும் நீரிழிவு நோய், இரத்தக்கொழுப்பு மிகைப்பு, அதிக பதற்றம், கருவுறாமை, தூக்கத்தில் குறட்டை மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற உடல்பருமன் தொடர்பான கோளாறுகளுக்கும் ஒரு முழு சிகிச்சை அணுகுமுறையை ஃபோர்டிஸ் ஜெம் சென்டர் வழங்குகிறது. இந்த மையம், உடல்பருமன் சிகிச்சைக்கும் மற்றும் நீரிழிவு நோய் தீர்வுக்கும் சிறந்த அனுபவமிக்க நிபுணர்கள், செய்முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது.

The Fortis Malar Hospital Happy Losers Club

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Two-Point-14-10-17]


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles