டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள் ஆன குழந்தைக்கு இதய ரத்தகுழாய் அடைப்பு நீக்கம்
சென்னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் (Critical Pulmonary Stenosis) பிறந்து நான்கே நாள் ஆன குழந்தைக்கு இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை பிறக்கும் முன்பே அதற்கு இந்தப்பிரச்சனை இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பிறந்தவுடன் அது நிருபனமானது. பின்னர் அவசரகாலசிகிச்சை அளிக்கக்கூடிய பிரிவில் அந்தகுழந்தை வைக்கப்பட்டு பின்னர் கேத் பரிசோதனைக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நான்காவது நாளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
“இந்தகுழந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனையை மருத்துவர்கள் Pulmonary Stenosis என்றுஅழைக்கிறார்கள். நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு தான் அது. இத்தகைய நிலை பத்து சதவீத இதய பாதிப்பை ஏற்படுத்தும்.பெரும்பாலான நேர்வுகளில் இது லேசாக இருக்கும். சிலருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த குழந்தையின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் செலுத்தப்படும் குழாயில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.
மற்றொரு சிக்கல் என்னவென்றால் குழந்தையின் உடல் எடை வெறும் 2.4 கிலோ தான். இருப்பினும் எந்வித பிரச்சனையும் இல்லாமல் சிக்கலான சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பொதுவாக அறியப்படும் நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும் பலூன் வால்வோ பிளாஸ்டி (பிபிவி) சிகிச்சை மூலமாக அந்தகுழாய் திறக்கப்பட்டு அடைப்பை மருத்துவர்கள்குழு நீக்கியது. தற்போது அந்தக் குழந்தை இதய கோளாறுகளில் இருந்து விடுபட்டுள்ளது. இனி அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. எதிர்காலத்திலும் எந்த ஒரு சிகிச்சையும் செய்யத்தேவையில்லை’’ என்று குழந்தைகளுக்கான இதய பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.பிரேம்சங்கர் கூறினார்.
பிறக்கும் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு Critical Pulmonary Stenosis காணப்படும். இவற்றில் 95 சதவீத குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பிறந்து 4 அல்லது 5 மாதங்களுக்கு பின்னர் அல்லது சில ஆண்டுகளுக்கு பின்னர் அதவாது அந்த குழந்தையின் உடல் நலத்தை பொறுத்து சிகிச்சைஅளிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் சில குழந்தைகளுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் போது மருத்துவ நிபுணர்களின் அவசர தலையீடு தேவைப்படும். சிறந்தமருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி கொண்ட மருத்துவமனை ஆகியவற்றால் மட்டுமே இதுபோன்ற சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கமுடியும் என்றும் டாக்டர் பிரசாந்த் கூறினார்.
குறிப்பிடவேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால் ஈராக்கை சேர்ந்த 6 வயது குழந்தைக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தான்.இதயத்தில் பல்வேறு கோளாறுகளுடன் பிறக்கும் குழந்தையை நீல நிற குழந்தை என்று மருத்துவர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட இந்த குழந்தைக்கு துருக்கியில் 3 அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இறுதி கட்ட அறுவை சிகிச்சையை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மருத்துவகுழுவினர் மேற்கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.ஜி.கோவிந்தராஜன், “ குழந்தைகளின் இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் குழாய்களில் ஏற்படும் அடைப்பை உரிய சிகிச்சை மூலமாக நீக்கமுடியும் என்பதை பலர் அறியாமல் உள்ளனர். 6 வயது குழந்தைக்கு நாங்கள் வெற்றிகரமாக திறந்த நிலையில் இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம். சிக்கல் நிறைந்த இந்த குழந்தைக்கு பலமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அர்பணிப்பு உணர்வு கொண்ட காமாட்சி நினைவு மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினரும் நவீன மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை கூட எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் எளிதாக செய்து முடிக்க முடிகிறது’’ என்றார்.