Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

SRM பல்கலைக்கழகத்திற்கு QS Stars-ன் 4 STAR தர மதிப்பீடு!

$
0
0

Quacquarelli Symonds (‘QS’) அமைப்பு, SRM பல்கலைக்கழகத்திற்கு 4 STAR தரமதிப்பீட்டைவழங்கியுள்ளது. இந்த அமைப்பு உலகளாவிய உயர்கல்வி முன்னணிக் குழுமம் ஆகும். இது உலகின் 5 கண்டங்களில் 25 மொழிகளில் பரவிய, 250க்கு மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இந்தப் பெருமையை இந்திய அளவில் 2 பல்கலைக்கழகங்கள் மட்டும், உலகம் முழுவதும் 50 பல்கலைக்கழகங்கள் மட்டுமே அடைந்துள்ளன.

தொகுமொத்தமாக இந்த 4 விண்மீன் தரத் தகுதியை வென்ற SRM பல்கலைக்கழகம் - கற்பித்தல், தொழில் வாய்ப்பு, உள்ளடக்கத்தன்மை ஆகியவற்றில் மிக அதிகத் தகுதி நிலையான 5 STAR தரத்தகுதியைப்பெற்றுள்ளது.

QS - உலகப்பல்கலைக்கழகதரமதிப்பீடுவெளியீட்டுக்குப் பெயர் பெற்ற அமைப்பாகும். ‘QS’ - பல்கலைக்கழகத் தரப்படுத்த மதிப்பீடு வழங்குவதில் உலகப் புகழ் பெற்ற அமைப்பாகும். தரவரிசைப்படுத்துவதுடன் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் தரம், தகுதி பற்றிய விரிவான அறிதலை பட்டம் பெற்றவர்களின் தொழில்வாய்ப்பு, விளையாட்டு வசதிகள், சமூகப் பொறுப்புகள் முதலிய கோணங்களில் விளங்கிக்கொள்ளும் நோக்குடன் விண்மீன் உயர்நிலை அளவை உறுதிப்படுத்தும் பணியையும் செய்கிறது. மரபு வழியிலான தரப்படுத்தலுக்கும் அப்பாற் பட்டவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமுடைய மாணவர்களின் தேவைகளையும் பல்கலைக்கழகங்களின் நயமான குழுமைப் பணியையும் எதிரொளிக்கும் வகையில் இந்த விண்மீன் அளவு அறிவித்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிறுவப்பட்டுள்ள பன்னாட்டுத் தரங்களுக்கு மாறாகப் பல்கலைக்கழகங்களின் மிக அகன்ற முக்கிய செயன்மைக் குறியீடுகளை இந்த நிறுவனம் மதிப்பீடு செய்கிறது. QS StarsTM - பிற எந்த உலகத் தரவரிசைப்படுத்தும் முறையைவிட, மிக அகன்ற அடிப்படைகளைத் தான் மதிப்பிடும் கல்வி நிறுவனத்தின் உயர்வுகள் மீதும் பன்முகத் தன்மைகள் மீதும் ஒளி பாய்ச்சுகிறது.

QS Stars - 50 வெவ்வேறு வகையான அளவீடுகளில் மதிப்பீடு செய்து 1 முதல் 5+ வரை விண்மீன் சிறப்பை 8 அகன்ற புலங்களில் வழங்குவதுடன் தொகுமொத்த தரவரிசைப்படுத்தத்தையும் அறிவிக்கிறது. இந்த 8 அளவுருக்கள் பின்வருமாறு : 1. கற்பித்தல் 2. தொழில்வாய்ப்பு 3. ஆராய்ச்சி 4. உலகவயமாதல் 5. வசதிகள் 6. புத்தாக்கம் 7. உள்ளடக்கத் தன்மை 8. சிறப்புத்திட்டம் ஆகியன. QS Stars இந்தத் தணிக்கை நடைமுறையைச் செயற்படுத்த 8-10 மாதங்களை எடுத்துக்கொள்கிறது. இந்த நடைமுறை SRM பல்கலைக்கழகத்திற்கு 2016 திசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

SRM University was awarded QS Stars 4 Star Rating


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles