சென்னை: ராஜஸ்தானி சங்கம் தமிழ் நாடு 1967ம் ஆண்டு அன்றைய முதல்வர் அண்ணாவால் துவக்கி வைக்கப்பட்டது இந்த ஆண்டு ராஜஸ்தானி சங்கம் பொன்விழாவை கொண்டாடுகிறது.
பொன்விழாவை முன்னிட்டு சங்கம் பல்வேறு சமூக நல திட்டங்கள், 'ராஜஸ்தான் பவன்' கட்டுவது, 50 கண் பரிசோதனை முகாம்கள், மாபெரும் மருத்துவ முகாம், கண்காட்சி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டது. பொன் விழாவை கொண்டாடும் இந்த வேளையில், பல செயல் திட்டங்களை அறிவித்துள்ளது .
பொன்விழா நிகழ்ச்சிகள் குறித்து சங்கத்தின் தலைவர் அசோக் குமார் மேத்தா, செயலர் ராஜேந்திர குமார், ஒருங்கிணைப்பாளர் கியான் சந்த் கோத்தாரி ஆகியோர் கூறுகையில் "1967ம் தொடங்க பட்ட ராஜஸ்தானி சங்கம் தமிழ் நாடு, இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. கல்வி நிறுவனம் நடத்துவது, மாணவர்களுக்கு படிப்பு நிதி உதவி வழங்குவது, இலவச மருத்துவ சேவை, தர்ம சாலைகள் நடத்துவது, பேரிடர் காலங்களில் மக்களுக்கு பல பணிகளை செய்து நலிந்த மக்களுக்கும் ஒரு பாதுகாவலாக விளங்கி வருகிறது. கடந்த 50 வருடங்களாக ராஜஸ்தான் மாநில மக்கள் தமிழ் நாட்டை தங்கள் ஊராகவே மாற்றி கொண்டு விட்டனர்.’
பொன்விழாவை முன்னிட்டு சங்கம் கான்சர் நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக தர்மசாலாவை அடையார் கான்சர் நிறுவனத்துடன் இனைந்து செயல் படுத்தி வருகிறது. கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தர்மசாலா கட்டிடத்தை மேம்படுத்தவும் புதிய வசதிகளை வழங்கிடவும் ராஜஸ்தானி சங்கம் திட்டமிட்டுள்ளது.
பொன் விழா அண்டையொட்டி, படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கு ரூ 50 லட்சம் அளவிற்கு வழங்கிட திட்டமிட்டுள்ளது. பட்டப்படிப்பு மற்றும் தொழில் முறை கல்விக்கும் உதவிட திட்டமிட்டுள்ளது. மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
ராஜஸ்தானி சங்கம் பொன் விழாவை முன்னிட்டு 50 கண் பரிசோதனை முகாம்களை நடத்த உள்ளது. மாபெரும் பல் நோக்கு மருத்துவ முகாமை நடத்த உள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள ராஜஸ்தான் மக்களுக்காக மாபெரும் கண்காட்சியை நடத்த உள்ளோம். ராஜஸ்தானியர்கள் தயாரிக்கும் பொருள்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் காட்சி படுத்தப்படும் .தக்ஷிண ராஜஸ்தானி போஸ்ட் என்ற பத்திரிகையையும் நடத்த திட்டமிட்டுள்ளது
தொழில், படிப்பு மற்றும் மருத்துவ வசதிக்காக சென்னைக்கு வரும் ராஜஸ்தானிய மக்களின் வசதிக்காக 'ராஜஸ்தான் பவன்' என்ற கட்டிடம் கட்டப்படும். இதில் ராஜஸ்தானி சங்க அலுவலகம் இயங்கும், சங்கத்தின் சமூக பணிகளும் செயல் படுத்தப்படும்.