பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின்ஒருபகுதியாக 1993ல்தொடங்கப்பட்டதுSRM உணவகமேலாண்மைக்கல்விநிறுவனம். இத்துறையில் நம்நாட்டின்முதன்மைக்கல்விநிறுவனமாகதிகழ்ந்துமாணவர்களுக்குதரமானகல்விச்சூழலையும்உள்ளார்ந்தகற்பித்தலையும்எப்பொழுதும்வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம் திறன்களைநன்குவளர்த்துக்கொள்ளும்வகையில்பயிற்சிஅளிப்பதில்சிறப்பாகவளர்ந்தோங்கிப்புகழுடன்விளங்குகிறது.
SRM உணவகமேலாண்மைக்கல்விநிறுவனம்சென்னை, திருச்சி, சிக்கிம், தில்லிஆகியஇடங்களில்இயங்குகிறது. நல்லஉள்கட்டமைப்புகள், புதுமைக்கருவிகள், திறனுறுவகுப்பறைகள், புதுவகைஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்டநூலகம், நிறுவனத்துடன்இணைந்தநட்சத்திரஉணவகம்ஆகியவைஇந்நிறுவனத்தில்உள்ளன. மாணவர்கள்கைமேல்பயனாகப்பயிற்சிபெற்றுத்தங்கள்திறமையையும்அறிவையும்வளர்த்துக்கொள்ளப்பெரிதும்உறுதுணையாகஉள்ளது. இந்தியாவில் HLACTயின்சிறப்புச்சான்றளிப்பைப்பெற்றஒரேதனியார்உணவகமேலாண்மைக்கல்விநிறுவனங்களில் SRM IHM மட்டும்என்பதைப்பெருமையுடன்தெரிவிக்கவிரும்புகிறோம்.
சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை கற்பிக்கும் வகையில் நம் SRM IHM கல்வி நிறுவனத்தின் மூலம் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் SWACHHTA HI SEWA எனும் தலைப்பில் பல நிகழ்ச்சிகள் அரங்கேறியது. செப்டம்பர் 18 முதல் 23ஆம் தேதி வரை நம் கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர். இதன் விளைவாக மாணவர்கள் 19ஆம் தேதி அன்று அரசு மேல்நிலை பள்ளியை தூய்மைப்படுத்தினர் மற்றும் 20ஆம் தேதியில் SRM பல்கலைக்கழக வளாகத்தை மாணவர்கள் தூய்மை ப்படுத்தினர் . இதை தொடர்ந்து 21ஆம் தேதி வியாழன் அன்று மாணவர்கள் பொத்தேரியில் உள்ள ஏரியை தூய்மைப்படுத்தினர் இச்செயல் நமது சுற்று சூழலை மேன்மேலும் அழகாகியது.
கடந்த 18.09.2017 அன்று சுமார் 100 மாணவர்களுடன் ஆசிரியர்களும் இனைந்து இரத்தினமங்கலத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுற்றுப்புறத்தை தூய்மை படுத்த “தூய்மை இந்தியா” என்னும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புலிக்குகை பகுதியை ஏறக்குறைய 200 மாணவர்கள் முகாமிட்டு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி வரிசையில் நின்று அனைவருக்கும் எடுத்துக் கூறும் விதமாக செயல் பட்டனர். மறுநாள் 19.09.2017அன்று ஏறக்குறைய 150 மாணவர்களுடன் செங்கல்பட்டில் சாலைகளை தூய்மை படுத்தி “தூய்மை இந்தியா” வின் முக்கியத்துவத்தை அறிவித்தனர்.
மேலும் கடந்த 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் அன்று உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பல்வேறு கல்லூரிகளிலிருந்துPaper Presentationல் பங்குபெற்றார்கள். சிறந்த கல்வியாளர் தலைமையில் கலந்துரையாடலும் (Panel Discussion) நடைபெற்றது. GASTRONOMIC TOURISM என்ற பொது தலைப்பில் சுவையான விருந்துடன் காலை நிகழ்ச்சி முடிவடைந்தது. மட்டுமல்லாமல், அன்று மதியம் சிறப்பு விருந்தினர் ஸ்ரீ. ஸ்ரீவட்ஸ் சஞ்சய்,இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தின் தென் பிராந்திய இயக்குனர், சிறப்பு விருந்தினராக பங்குபெற்று உரையாற்றினார்.
மேலும் ரோட்டேரியன் G ஒளிவண்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர், எமரால்டு பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, IHM சென்னையின் தலைமை நிர்வாகி திரு.ஸ்ரீ ராஜ் மோகன் மற்றும் பல ஹோட்டல் மேலாளர்கள் உரையாடலும் நடைபெற்றது. இவர்களின் உரையோடு “தூய்மை இந்தியா”எனும் சிற்றேட்டை (pamphlet) ஸ்ரீ. ஸ்ரீவட்ஸ் சஞ்சய் வெளியிட்டு அதனை SRM IHM இயக்குனர் Dr.D.அந்தோணி அசோக் குமார் பெற்று அனைத்து விருந்தினருக்கும் வழங்க அந்நாள் நன்நாளாக இறுதி கட்ட நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.
[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-Institute-26-09-17]