மூன்றாவது ஆசிய - ஓசனீயா சோனோ வேதியல் குழு மாநாடு, செப்டம்பர் 14 முதல் 16 தேதி வரை 2017 ஆம் ஆண்டு இனிதே நடந்தேறியது. இந்த மாநாடு, திரு இராமசாமி நினைவுப் (SRM) பல்கலைக்கழகம் மற்றும் ஆசியா - ஓசனீயா சோனோ வேதியல் குழுவின் கூட்டு முயற்சியால் நடத்தப்பட்டன. உலகளாவிய ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இந்த மாநாடு அமைந்தது. இதன் விளைவாக 45 உலக தர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையை இந்த மாநாட்டில் பகிர்ந்துக் கொண்டனர்.
பல்கலைக்கழக மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமைந்தது. இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் சோனோ கெமிசுட்டுரி, ஐட்ரோ டைனமிக் கேவிடேசன் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல் செய்தனர். தரமான மற்றும் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மூன்று நாள்கள் நடந்தேறிய இந்த மாநாட்டில் இரண்டு முழு விரிவுரைகள், நான்கு சிறப்பு விரிவுரைகள், முப்பது அழைக்கப்பட்ட விரிவுரைகள், பதினேழு வாய்வழி விளக்கக் காட்சிகள் மற்றும் அறுபத்தைந்து சுவரொட்டி விளக்கக் காட்சிகள் இடம்பெற்றன. பிரான்சு, தென் கொரியா, மலேசியா, ரசியா, ஜப்பான், இஸ்ரேல், பிரேசில், நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பங்களிப்பை ஈந்தனர். டி.எசு.டி. - செருப், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் பொறியியல் குழு போன்ற பொதுத்துறை நிதியுதவி நிறுவனங்கள் இந்த மாநாட்டிற்கு நிதியுதவி செய்தன.
இந்த மாநாட்டில் டி.எசு - டி. செரப், அறிவியல் துறை செயலாளர் டாக்டர் பிரகசுபதி அவர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்றார். முனைவர் எம்.அசோக் குமார், அதிபர் ஏவோஎசுஎசு மற்றும் தீன் சர்வதேச உறவுதுறை, மெல்பர்ன் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.