(வாரம்தோறும் ஞாயிறு காலை 8.00 மணிக்கு)
பெப்பெர்ஸ் டிவியில் "பா" எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள், கர்நாடக இசைப்பாடகர்கள் கலந்து கொண்டு அவர்களது இசை அனுபவம், சாதனைகள், மற்றும் விருதுகள் பற்றி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் இதுவரை இசை மேதைகளான கத்ரி கோபால்நாத், விக்கு விநாயக், டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் வரும் வாரத்தில் பாடகி சித்ராம்பரி கிருஷ்ணகுமார் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்ரீ தேவி மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் ஆனந்தராஜ் வழங்கும் "பா" வாரம்தோறும் ஞாயிறு காலை 8.00 மணிக்கு பெப்பெர்ஸ் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
Image may be NSFW.
Clik here to view.