Quantcast
Channel: International News, Local News, Press Release, Chennai Events - Chennaipatrika
Viewing all articles
Browse latest Browse all 6182

அஞ்ஜியோப்ளாஸ்டி சிறப்புநுட்பங்கள்- அபோலோ ஹாஸ்பிடல் கலந்துரையாடல்

$
0
0

'Photo Caption: (L to R) :​ Dr.Gnanaraj, Senior Consultant - Cardiology, Apollo Speciality Hospitals, ​Dr. Maoto Habara, Chief Physician Cardiovascular Medicine, Toyohashi Heart Center, Japan and  Dr. Abraham, DMS, Apollo Speciality Hospitals, Vaanagaram.'

சென்னை, 6 செப்டெம்பர் 2017 - இந்தியாவின் ப்ரீமியர் ஹெல்த்கேர் சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் அபோலோ ஹாஸ்பிடல்ஸ், சிடிஒ எனப்படும் ‘க்ரானிக் டோட்டல் அக்லுஷன்’ (Chronic Total Occlusion - CTO) குறித்த பயிற்சிப்பட்டறையை வானகரத்தில் இருக்கும் அபோலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸில் சிறப்பாக நடத்தியது. இந்த பயிற்சிப்பட்டறை, ஜப்பானின் டோயோஹாசி ஹார்ட் செண்டரின் கார்டியோவாஸ்குலர் மெடிசின் பிரிவில் உலகப்புகழ் பெற்ற இதயநோய் நிபுணர் டாக்டர் மவோடோ கபாரா (Dr. Maoto Habara, Cardiovascular Medicine, Toyohashi Heart Center, Japan) முன்னிலையில் இன்று நடைப்பெற்றது. இண்டர்வென்ஷனல் கார்டியாலஜி குறித்த அதிநவீன மேம்பட்ட நுட்பங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்ட இந்த பயிற்சிப்பட்டறையில் 100 இதயநோய் மருத்துவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இதயத்தில் இருக்கும் கோரோனரி தமனியின் உள்ளே அதன் சுவர்களில், கொழுப்பு படிமங்கள் 3 மாதங்களுக்கும் மேலாக படியும் போது முழுவதுமாக அடைத்துவிடுகின்றன இதன்காரணமாக சிடிஒ எனப்படும் ’க்ரானிக் டோட்டல் அக்லுஷன்’ உண்டாகிறது. .  இதன் காரணமாக மார்பு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த அடைப்புகள், மிகவும் கடினமான திசுக்களால் உண்டாக்கப்படுகின்றன. இதனால் நாம் வழக்கமாக பயன்படுத்தும் வழிமுறைகளான ‘கைட் வயர்கள்’ (guide wires) மற்றும் பலூன் கேதெடேர்கள்’ (balloon catheters) ஆகியவற்றை பயன்படுத்துவதில் அதிக சிரமம் இருக்கிறது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஆஞ்ஜியோப்ளாஸ்டியை போல் அல்லாமல், சிடிஒ-வை கையாள மிகவும் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வயர்கள், பலூன்கள் மற்றும் கேதேடெர்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த நவீன மருத்துவ தொழில்நுட்பம் மூலம் சிடிஒ-விற்கான சிகிச்சையை நிபுணத்துவமுடன் கையாளமுடியும். உலகளவில் இதயத்தின் உள் நுழையும் சிகிச்சை முறைகளில் சிடிஒ கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. அதேபோல் அஞ்ஜியோப்ளாஸ்டியின் வெற்றி சதவிகிதமானது, நிபுணத்துவம் பெற்ற பயிற்சிகள், அனுபவம் மற்றும் சிடிஒ-வை கையாளப் பயன்படுத்தப்படும் ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன உபகரணங்களைப் பொறுத்தே அமைகின்றன. அபோலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், உலகளவில் இதயநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர்காக்க உதவும் வகையில், இந்தியாவில் இருக்கும் இதயநோய் மருத்துவர்களுக்கென ப்ரத்யேகமாக இந்த கலந்துரையாடல் மற்றும் பயிற்சிப்பட்டறையை நடத்தியிருக்கிறது. இதன் மூலம் இதயநோய்க்கான சிகிச்சையளிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில், மேம்பட்ட மருத்துவ வழிமுறைகளில் விழிப்புணர்ச்சியையும், அனுபவத்தையும் அளித்திருக்கிறது.

இந்த பயிற்சிப்பட்டறையில், ஜப்பானைச் சேர்ந்த டோயோகசி ஹார்ட் செண்டரின் கார்டியோவாஸ்குலர் மெடிசின் பிரிவின் தலைமை மருத்துவரான டாக்டர், மவோடோ கபாரா (Dr. Maoto Habara, Chief Physician Cardiovascular Medicine, Toyohashi Heart Center, Japan) நிபுணத்துவம் வாய்ந்த சிடிஒ நுட்பங்கள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி பேசுகையில், ’’100% உள்ள அடைப்புகளைக் கூட  ஆஞ்ஜியோப்ளாஸ்டி மூலம் சிகிச்சை அளிக்கமுடியும். கோரோனரி தமனியில் 100% அடைப்பு இருக்கும் நோயாளிகள், அறுவைச் சிகிச்சை செய்வதற்கே அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனாலும் ஆஞ்ஜியோப்ளாஸ்டி மூலமாக அடைப்புகளை நாம் முழுமையாக நீக்கமுடியும். அதிநவீன மேம்பட்ட சிடிஒ ஆஞ்ஜியோப்ளாஸ்டி, இதய நோயாளிகளின் வாழ்க்கையின் தரத்தை குறிப்பிடுமளவுக்கு உயர்த்துகிறது. அவர்களின் இதயத்தின் செயல்பாடுகளை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது. இதய அறுவைச்சிகிச்சைக்கான தேவையைக் குறைக்கிறது. அதோடு நீண்டகாலம் வாழ்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. மேலும் இதன் கூடுதல் பலனாக, அறுவைச் சிகிச்சைக்கு பிறகான குணமடைதல் விஷயத்தில், ஒபன் ஹார்ட் சர்ஜரியை விட மிக விரைவாக, மிக குறைவான காலத்திலேயே நோயாளிகள் குணமடைய இது பெரிதும் உதவுகிறது’’ என்றார்.

அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அபோலோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் கன்சல்டண்ட் டாக்டர். ஆனந்த ஞானராஜ் (Dr. Anand Gnanaraj, Senior Consultant Interventional Cardiologist, Apollo Hospitals, Ayanambakkam) பேசுகையில், ‘’சிடிஒ-யினால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பொதுவாக ஒபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சைக்கான மார்பினை திறந்து இதயத்தில் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்த அறுவைச்சிகிச்சையின் போது, இதயமானது அறுவைச்சிகிச்சை முடியும் வரை நிறுத்திவைக்கப்படும். அந்நேரத்தில் நோயாளியின் உடலிருந்து  மற்ற பகுதியின் இரத்தக்குழாய் மூலம் இரத்த ஓட்டத்திற்கு மாற்றுவழி உருவாக்கப்படும்.

இந்த அறுவைச்சிகிச்சையின் அடையாளமாக நோயாளியின் உடலில் தழும்பு இருக்கும். அறுவைச்சிகிச்சைக்கு பிறகு குணமடைய  அதிக காலம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். ஒருவரின் மார்புப்பகுதி திறக்கப்பட்டால், அவர்களது ஆத்மா வெளியேறிவிடும் என ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். அதனால் இதற்கு மாற்றாக இதயத்தில் இருக்கும் அடைப்புகளை நீக்க அஞ்ஜியோப்ளாஸ்டியை பயன்படுத்துகிறார்கள். டாக்டர். மாவோடோ கபாரா நமக்காக இங்கே வந்திருந்து, கார்டியாலஜி துறையில்  இருக்கும் தனது அனுபவத்தையும், ஆழ்ந்த நிபுணத்துவ அறிவையும் நம்மோடு பகிர்ந்து கொண்டு நம்மை கெளரவித்திருக்கிறார். இதன்மூலம் அபோலோ ஹாஸ்பிடல்ஸில் சிகிச்சைப் பெறும் இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் புதிய கதவுகளையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது’’ என்றார்.

அபோலோ ஹாஸ்பிடல்ஸ் குழுமம், இந்தியாவில் இதயம் சம்பந்தமான ‘க்ரானிக் டோட்டல் அக்லுஷன்ஸ்’ சிகிச்சைக்கான ப்ரத்யேகமான, சிறப்பு நிபுணத்துவம் பெற்ற முதல் சிகிச்சை மையத்தை திறந்திருப்பதன் மூலம் சிடிஒ சிகிச்சையில் முன்னோடியாகி இருக்கிறது. இம்மையம் அஞ்ஜியோப்ளாஸ்டி முறைகள் மூலம் இதயத்தில் இருக்கும் 100% அடைப்புகளுக்கான தீர்வுகளை அளிக்கும். இந்தியாவில் சிடிஒ வழிமுறைகளின் உதவிக்காக ஒரு சில மையங்களில் மட்டுமே கையாளப்படும் ஐவியூஎஸ் (IVUS) தொழில்நுட்பம், அபோலோவின் சிடிஒ மையத்தில் பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வழிமுறைகளின் போது மிகவும் பாதுகாப்பாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் ஐவியூஎஸ் தொழில்நுட்பம் இருக்கிறது.  வானகரத்தில் செயல்பட்டு வரும் அபோலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், பல சிடிஒ மூலமான சிகிச்சைகளை வெற்றிகரமாக அளித்திருக்கிறது. மேலும் ஐவியூஎஸ் கார்டியாக கேதேடேரிஷேஷன் சூட்ஸ் (IVUS cardiac catheterization suites), சிடி கோரோனரி அஞ்ஜியோக்ராஃபி (CT Coronary Angiography), கார்டியாக் எம் ஆர் ஐ, (Cardiac MRI), கோரோனரி கைட் வயர்ஸ் (Coronary guide wire), மைக்ரோ கேதேடேர்ஸ் (micro-catheters), பலூன் (balloons) மற்றும் இண்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் (Intra Vascular Ultra Sound - IVUS), ஆப்டிகல் கோஹிரென்ஸ் டோமோக்ராஃபி (Optical Coherence Tomography - OCT) ஆகிய தொழில்நுட்பங்களிலும் சிறப்பான, நிபுணத்துவமுள்ள சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வருகிறது.

CTO Centre of Excellence for 100 percent Blocked Arteries at Apollo Speciality Hospitals


Viewing all articles
Browse latest Browse all 6182

Trending Articles