மதிமுக பொதுச்செயலர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது "நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தன்னால் முயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு தருவதாக நம்பிக்கை தெரிவித்த மத்திய அரசு, அவசர சட்டத்தை நிறைவேற்ற கூறிய தோடு, அதற்கு சட்டத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகமும் அனுமதி கொடுத்து விட்டு சுப்ரீம் கோர்ட்டில் வந்து நாங்கள் அனுமதி கொடுத்ததை ரத்து செய்து விட்டோம் என்கிறது.
நாட்டில் எந்த ஒரு மாநிலத்திற்கும் இது போன்ற அநீதியை மத்திய அரசு செய்ததில்லை. அனிதாவின் துயர மரணத்திற்கு மத்திய அரசே காரணம். மாநில அரசு தவறு செய்தால் முதலில் கண்டிப்பது நான்தான். நீட் விவகாரத்தில் தமிழக அரசு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது.
மாணவர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்று கோவில், குடிநீர், நூலக வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மதிப்பெண் குறைந்தாலும், தேர்வில் தோல்வியுற்றாலும் கவலைப்படாமல் இருக்க பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்று அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.